Saturday 20 August 2011

கோத்தபாயவுக்கு புதுடெல்லி பதிலடி கொடுக்க வேண்டும்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
புதுடெல்லி: போர்க்குற்றங்கள், பன்னாட்டு விசாரணை என் றெல்லாம் ஜெயலலிதா பேசிக் கொண்டிருப்பது பயனில்லாத ஒன்று என்று
 இலங்கை பாது காப்புச் செயலரும் அதிபர் ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபாய கூறியுள்ளார். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீது உண் மையிலேயே ஜெயலலிதாவுக்கு அக்கறையிருந்தால், அவர் களுக்கு எவ்வாறு மறு வாழ்வு அளிப்பது என்பதைப் பற்றி பேச வேண்டும் என்று கூறியிருக் கிறார். ஹெட்லைன்ஸ் டுடே ஆங் கில தொலைக்காட்சிக்கு அண் மையில் அளித்த நேர் காணலில் கோத்தபய மேற்கண்டபடி கூறி யிருந்தார். அவரது கூற்றுக்கு தமிழகத்திலும் இந்தியா தழுவிய நிலையிலும் எதிர்க்கட்சிகளிடம் இருந்தும் பல அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி யுள்ளன. இலங்கை அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு சரியான பதிலை இந்தியா கொடுக்க வேண்டும் என்று அந்த அமைப்புகளும் ஊடகங்களும் மத்திய அரசை நெறுக்கி வருவ தாகக் கூறப்படுகிறது. தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இலங்கை அரசால் வீழ்த்தப்பட்டு ஆண்டுகள் இரண்டு நிறை வடைந்தாலும் அதில் பாதிக் கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் இன்னமும் துயரத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையை இந்தியாவில் வாழும் இந்தியர்கள் தட்டிக் கேட்கக் கூடாது என்பது போலான அவரது பேட்டி, தமிழ கத்தின் தமிழ்சார்ந்த அமைப்பு களுக்கும் பத்திரிகைகளுக்கும் எரிச்சலைத் தந்துள்ளது. அந்த நேர்காணலில் அவரிடம் தமிழக சட்டப்பேரவை யில் அண்மையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள் பற்றி கேட்கப்பட்டதற்கு, அது அரசியல் ஆதாயம் பெறு வதற்கான முயற்சி என்று கூறினார். உண்மையை அறியாமல் நிறைவேற்றப்பட்ட அர்த்தமற்ற தீர்மானங்கள் அவை. ëஜயலலி தாவிற்கு தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால், இலங்கையின் கடற்பரப்பிற்குள் வந்து தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதை தடுத்து நிறுத்தட் டும். அதை அவர் முதலில் செய்ய வேண்டும் என்று கூறி யுள்ளார். இந்திய கடல் எல்லை யில் மீன்பிடித்து வரும் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற் படையினரால் கொல்லப்படுவ தாகக் கூறப்படும் குற்றச் சாட்டுக்கு அவர் எதுவும் கருத் துரைக்கவில்லை. இப்போது இலங்கையின் நில வரம் என்ன என்று ëஜயலலிதா அறிந்துகொள்ள வேண்டும். அது தொடர்பான ஆவணங்களை அவருக்கு நாங்கள் அளிக்கத் தயார் என்றும் தமிழர்கள் அவர் கள் வாழ்ந்த இடங்களிலேயே மீண்டும் குடியமர்த்தப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு ஏற் படுத்தித்தர வேண்டும் என்பதே இப்போதைய தேவை. அதை விட்டுவிட்டு தேவையில்லாமல் போர்க்குற்றம், பன்னாட்டு விசாரணை என்றெல்லாம் பேசி வருவதால் யாருக்கும் எவ்விதப் பயனும் இல்லை. அது வீணான வேலை என்று பதிலளித்துள்ளார். “தமிழர்களுக்கு இதற்கு மேலும் அதிகாரப் பகிர்வு எல்லாம் தர முடியாது. இப்போது உள்ள அரசியல் சட்டத்தின் கீழ் சிங்களர்களும் தமிழர்களும் சேர்ந்து வாழ முடியும். விடுதலைப் புலிகள் போய்விட்ட நிலையில், அதிகாரப் பகிர்வு என்பதெல்லாம் இனி எடுபடாது,” என்று கூறியுள்ளார். இலங்கையில் தமிழர்கள் கொடூரமாகக் கொலைசெய்யப் பட்ட கோரக் காட்சிகளை சேனல் 4 தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்டது. அதுபற்றிக் கருத் துரைத்த கோத்தபய, “அந்தத் தொலைக்காட்சியின் நட வடிக்கை நேர்மையற்ற ஒன்று என்றும் இலங்கையில் சர்வாதி காரம் இல்லை. இலங்கை ஒரு சுதந்திர நாடு. எல்லாம் சட்டப் படியே நடக்கிறது என்ற அவர் பன்னாட்டு விசாரணையை இலங்கை எவ்விதத்திலும் ஒப்புக் கொள்ளாது,” என்று கூறியுள்ளார். போர்க் காலங்களில் இலங் கைத் தமிழர்கள், இலங்கை ராணுவத்தினரால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவங்கள், பாலி யல் வன்முறைச் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் உள்ளது. இலங்கையில் நடந்த போர்க் கொடுமைகளுக்கான ஆதாரங் கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இருந்தும் இலங்கை மீது இந்தியா கடுமை யான போக்கை மேற்கொள்ளாதது தமிழகக் கட்சிகள் மற்றும் அமைப்புகளிடையே எரிச்சலைத் தந்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள், அடிப்படை வசதிகூட இல்லாமல் எதிர்காலம் எப்படி யிருக்கும் என்றே தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர். மனிதாபி மான அடிப்படையில், போரினால் பாதிக்கப்பட்டவர்களை மீள் குடியமர்த்தி மறுவாழ்வு தர இந்தியா 500 கோடி ரூபாய் கொடுத்து உதவியுள்ளது. மனிதாபிமான உதவியை இந்தியா செய்து வந்தாலும் இலங்கை அமைச்சர் கோத்த பயவின் கூற்றுக்குச் சரியான பதிலடி கொடுக்கவேண்டும் என்று தமிழ் அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் இந்திய அரசை நெறுக்கி வருவதாகக் கூறப்படுகிறது. அதோடு இந்திய வெளியுறவு அமைச்சு, இலங்கை அமைச்சரின் இந்தப் பேச்சைக் கண்டித்து இந்தியாவுக்கான இலங்கைத் தூதருக்குக் கடிதம் அனுப்பி கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துக்கொள்ளவேண்டும் என்று எக்ஸ்பிரஸ்பஸ் இணைய நாளேடு கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கைக்கு எதிராக இந்தியா வர்த்தகத் தடை விதிக்க வேண்டும் என்றும் போர்க் குற்றங்களுக்காக விசாரிக்கப்பட வேண்டும் என்பன போன்ற தமிழக சட்டப்பேரவையின் தீர்மானம் பற்றி எவ்விதக் கருத்தும் கூறாமல் மத்திய அரசு மௌனம் சாதித்து வருகிறது. அதனால் தான் கோத்தபாய இவ்வாறு இவ்வளவு தைரியமாக கூறியுள்ளார் என்று தமிழக முதல்வர் ëஜயலலிதா இதுபற்றிக் கருத்துரைத்துள்ளார்.


1 comments:

said...

athikaaraththin uchcham avarin petchil therikirathu.... vidivu eppothu pirakkum ?