Saturday 20 August 2011

கரடிகளின் கோரப் பிடியில் சிக்கி உயிரிழந்த தந்தையும் மகளும்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மாஸ்கோ: ஒரு தந்தையும் அவரின் வளர்ப்பு மகளும் கரடியாலும் அதன் குட்டிகளாலும் தாக்கப்பட்டு
பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் ரஷ்யாவில் நடந்துள்ளது. தூர கிழக்கு செர்பியாவில் உள்ள ஒரு நகருக்கு அருகே ஒரு ஆற்றில் புதன்கிழமை இகோர் ஷிகானன்வோவ் தன் வளர்ப்பு மகள் அல்கா மாஸ் கால்யோவாவுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த தாய்க் கரடியும் அதன் மூன்று குட்டிகளும் முதலில் தந்தையைத் தாக்கியிருக்கின்றன. பின்னர் அல்காவை வெகு தூரம் விரட்டிச் சென்ற தாய்க்கரடி பிறகு அதன் காலால் அவரைப் பிடித்திருக்கிறது. கரடியிடம் சிக்கிய அல்கா எப்படியோ கைத் தொலைபேசியில் தன் தாயு டன் தொடர்புகொண்டு, “அம்மா, அந்தக் கரடி என்னை உயிரோடு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. என்னைக் காப்பாற்றவும்,” என்று அலறியிருக்கிறார். கடைசியாக அந்தப் பெண் தன் தாயிடம்,“நான் இதுவரை செய்த அனைத்தையும் மன்னித்து விடுங்கள். உங்களை மிகவும் நேசிக்கிறேன்,” என்று கூறி யிருக்கிறார். தன் மகள் தமாஷ் செய்கிறாள் என்று முதலில் நினைத்த தாய், கரடியின் மென்று சாப்பிடும் சத்தத்தைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்து போலிசாரிடம் தெரிவித்திருக்கிறார். போலிசார் அங்கு சென்றபோது தந்தையும் மகளும் ரத்த வெள்ளத் தில் இறந்து கிடப்பதைப் பார்த்த தாக பத்திரிகை தகவல் கூறியது.

0 comments: