Thursday 11 August 2011

பொறியியல் படிப்புக்கான கவுன்சலிங் இன்று கடைசி நாள்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பொறியியல் படிப்புக்கான கவுன்சலிங் மூலம் ஒரு லட்சம் மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்துள்ளனர்.
 இன்று மாலையுடன் பொதுப் பிரிவினருக்கான கவுன்சலிங் நிறைவடைகிறது. பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. பொதுப் பிரிவினருக்கான கவுன்சலிங் ஜூலை 8ம் தேதி தொடங்கியது. பொதுப் பிரிவில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 622 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். நேற்று வரை நடந்து முடிந்த கவுன்சலிங்கில் கலந்து கொள்ள 1,37,241 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. இதில் 1,02,235 பேர் கல்லூரிகளை தேர்வு செய்துள்ளனர். இன்று மாலையுடன் பொதுப் பிரிவு கவுன்சலிங் முடிகிறது.




பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்து துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கென நாளை (12ம் தேதி) கவுன்சலிங் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள 2 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜூலை 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடந்த தொழில் கல்வி பிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங்கில் 3 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர். தொழில்கல்வி பிரிவில் இன்னும் 1,400 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களில் மாணவர்களை தேர்வு செய்வதற்கான 2ம் கட்ட கவுன்சலிங் வரும் 16, 17ம் தேதிகளில் நடக்கிறது.



அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன. தற்போது தனியார் கல்லூரிகளில் மட்டுமே இடங்கள் உள்ளன. அருந்ததி பிரிவை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பல இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்கள் எஸ்.சி. பிரிவினருக்கு வழங்கப்படுகிறது. இந்த இடங்களை நிரப்புவதற்கான கவுன்சலிங் வரும் 14ம் தேதி நடக்கிறது. ஏற்கனவே கவுன்சலிங்கில் கலந்து கொண்டு கல்லூரிகளை தேர்வு செய்த எஸ்.சி. மாணவர்களும் இதில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: