Friday 12 August 2011

அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தேர்தல் முறைகேடு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தி.மு.க.வின் எ.வ. வேலு, கும்பகோணம் க. அன்பழகன், அக்கட்சின் பொருளாளர் மு.க. ஸ்டாலின்,
பெரியகருப்பன் மற்றும் தேமுதிகவைச் சேர்ந்த நல்லதம்பி ஆகியோரின் சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றி குறித்த வழக்குகளில் அவர்கள் 5 பேருக்கும் அழைப்பாணை அனுப்பச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
அது குறித்துத் தேர்தல் ஆணையத்துக்கும் அழைப்பானை அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

நான்கு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. நீதிபதி கே. வெங்கட்ராமன் முன்னிலையில் இந்த மனுக்கள் புதன்கிழமை விசாரணைக்கு வந்தன.

கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினின் தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி அத்தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.

2011 மே மாதம் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலின் போது துணை முதல்வர் பொறுப்பில் இருந்த ஸ்டாலின் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினார். பண பலம், ஆள் பலம், அதிகார பலம் ஆகியவற்றின் மூலம் தேர்தலில் ஏராளமான முறைகேடுகளில் அவர் ஈடுபட்டார்.
வாக்கு எண்ணிக்கையின் போது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பல முறைகேடுகள் செய்ததன் மூலம்தான் அவர் வெற்றி பெற முடிந்தது என்று சைதை துரைசாமி தனது மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.
திருவண்ணாமலை தொகுதியில் திமுகவின் எ.வ. வேலு வெற்றி பெற்றதை எதிர்த்து அந்தத் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எஸ். ராமச்சந்திரன் மனு தாக்கல் செய்துள்ளார். கும்பகோணம் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் க. அன்பழகன் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி அதிமுக வேட்பாளர் ராம். ராமநாதன் வழக்கு தொடர்ந்துள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கே.ஆர். பெரியகருப்பனின் வெற்றியை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் எஸ். சந்தானகிருஷ்ணன் மனுதாக்கல் செய்துள்ளார்.

எழும்பூர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி பெற்ற வெற்றியை எதிர்த்தும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

0 comments: