Monday 1 August 2011

ஏ.ஆர். ரஹ்மான் துவக்க விழாவுக்கு இசையமைக்கிறார்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்க ஒரு ஆண்டுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில்
, லண்டன் நகரம் தயாராகிவிட்டது.
லண்டனில் 30வது ஒலிம்பிக் போட்டி, வரும் 2012, ஜூலை 27ல் துவங்க உள்ளது. இதன் துவக்கவிழாவுக்கு ஒரு ஆண்டுக்கும் சற்று குறைவான நாட்களே உள்ளன.
இந்தியாவில் கொமன்வெல்த் போட்டி ஆரம்பிக்க ஒரு வாரத்துக்கு முன் கூட பணிகள் நடந்து கொண்டிருந்ததை போல இல்லாமல், இப்போதே லண்டன் தயாராகி விட்டது. கட்டுமானப்பணிகள் 90 சதவீதம் வரை முடிந்துள்ளன.
சமீபத்தில் ரூ. 1952 கோடியில் தயாரான நீச்சல் மைதானத்தை திறந்து வைத்த, சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் ஜாக்ஸ் ரோகி கூறியதாவது,

எனது வாழ்க்கையில் பல மைதானங்களை பார்த்துள்ளேன். ஆனால், இந்த நீச்சல் மைதானத்தை பார்த்தவுடன் அதிர்ச்சியாகி விட்டேன். அந்தளவுக்கு பிரமாண்டமாக அமைந்துள்ளது. இதேபோல மற்ற மைதானங்களின் வேலையும் நிறைவடையும் நிலையில் உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில், குறித்த “பட்ஜெட்டில்’, சிறந்த தரத்தில் உருவாகியுள்ளது. இந்த ஒலிம்பிக் சிறப்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார்.

துவக்கவிழா நடக்கும் 80 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட மைதானம், 2012 மார்ச்சில் தயாராகிறது. இதில் தடகள பாதைகள் அமைக்கும் பணிகள் மே மாதத்தில் முடிவுற்று, சோதனை ஓட்டம் துவங்கவுள்ளது. 17 ஆயிரம் வீரர்கள் தங்கும் வகையிலான ஒலிம்பிக் கிராமம், இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடைகிறது.
சமீபத்தில் நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் லண்டன் மக்களை சற்று கவலை கொள்ளச் செய்திருக்கிறது. இது குறித்து தேசிய ஒலிம்பிக் பாதுகாப்புக் குழுவில் இணை இயக்குநர் கிறிஸ் அல்லிசன் கூறுகையில், “பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இருக்கும் என்று எதிர்பார்த்துள்ளோம், இருப்பினும் அவற்றை முறியடிக்கவும் தயாராக உள்ளோம்” என்றார்.

கடந்த 2008 ஒலிம்பிக், சீனாவின் பீஜிங்கில் நடந்த போது, பிரமாண்ட மான துவக்க விழாவை பார்த்து உலகமே வியந் தது. இதனால் லண்டன் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட் டுள்ளது. ஆனால், துவக்கவிழா குறித்து எவ்வித தகவல் களையும் தெரிவிக் காமல், ரகசியம் காத்து வருகின்றனர்.

தவிர, “ஸ்லம்டாக் மில்லியனர்” என்ற படத்துக்காக ஆஸ் கர் விருது வென்ற இயக்குநர் டேனி போயல் தான், நிகழ்ச்சி தொகுப்பாள ராக செயல்பட்டு வருவதாக தெரிகிறது இத்துடன் இந்தியர்கள் மட்டுமன்றி உலக மக்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், துவக்கவிழாவுக்கு இசையமைக்கின்றார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில சுவாரஸ்ய தகவல்கள்
லண்டன் ஒலிம்பிக் நடத்த தேவையான மைதானங்கள் கட்டுவது, புதுப்பித்தல் பணிகள் என, போட்டிக்கு தயாராவதற்கு மட்டும் ஆன செலவு ரூ. 66,225 கோடியாம்.
*உதைபந்து, டென்னிஸ் உட்பட மொத்தம் 26 வகையான போட்டிகள் இம்முறை இடம்பெறுகின்றன.

*ஒலிம்பிக் கிராமத்துடன் சேர்த்து, மொத்தம் 32 இடங்கள் போட்டிக்கு தயாராகின்றன.
*200 நாடுகள் இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளன.
*5000க்கும் மேற்பட்ட நடுவர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
*இந்த ஒலிம்பிக்கில் மொத்தம் 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
*ஒலிம்பிக் போட்டிகள் குறித்த செய்திகள் சேகரிக்க, நேரடி ஒலிபரப்பு செய்ய என ஊடகங்களைச் சேர்ந்த, 20 ஆயிரம் பேர் வருகை தருவார்கள் என்று தெரிகிறது.

2 comments:

said...

:D நண்பர் தின நல்வாழ்த்துக்கள் :D

said...

:D நண்பர் தின நல்வாழ்த்துக்கள் :D