Tuesday 9 August 2011

2 மாதத்தில் மும்பையில் 42 கர்ப்பிணிகள் மரணம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மும்பையில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கடந்த 2
மாதங்களில் 42 கர்ப்பிணி பெண்கள் மரணமடைந்துள் ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மஞ்சள் காமாலை நோய்க்கு பலியாகி யிருப்பதாக மும்பை மாநகராட்சி சுகா தாரத்துறை அதிகாரி டாக்டர் ஆஷா அத்வானி தெரிவித்துள்ளார்.




இது குறித்து அவர் மேலும் கூறியதாவது; மும்பையில் ஜூன் மாதத்தில் மட்டும் 23 கர்ப்பிணிகள் இறந்துள்ளனர்.



இதில் 11 பேர் மஞ்சள்காமாலை நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர், ஜூலை மாதத்தில் 19 பேர் இறந்துள்ளனர். இதில் 6 பேர் மஞ்சள்காமாலை நோயால் பாதிக் கப்பட்டிருந்தனர். மழைக்காலத்தில் மஞ்சள் காமாலை நோய் பரவுவது வழக்கமான ஒன்று என்றாலும் இந்த அளவு கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. குடிநீரை காய்ச்சி பருக வேண்டும் என மும்பைவாசிகளுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.



0 comments: