Monday 8 August 2011

போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு பெண் அமைச்சர் மிரட்டல்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சிதம்பரம்: வீடு புகுந்து சூறையாடியது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக அதிமுக பெண் அமைச்சர் செல்வி ராமஜெயத்தின்
 மருமகன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரை கைது செய்யக்கூடாது என்று போலீசாரை பெண் அமைச்சர் மிரட்டுவதாக தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


சிதம்பரம் வட்டம் வால்காரமேடு கிராமத்தை சேர்ந்தவர் பாலு (46). திமுக மாவட்ட பிரதிநிதி. இவரது தம்பி முருகனும் (41) திமுக பிரமுகர். சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக வேலை செய்த ராஜ் என்ற ராஜ்மோகனுக்கும் இவர்களுக்கும் மோதல் இருந்து வந்தது. ராஜ்மோகன் சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயத்தின் மருமகன்.

பாலு, முருகன் ஆகியோரது பொறுப்பில் உள்ள வாசு என்பவருக்கு சொந்தமான வீட்டை ராஜ்மோகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடந்த 5ம் தேதி சூறையாடினர். இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீசில் முருகன் புகார் செய்தார். கொலை மிரட்டல் விடுத்தல், அத்துமீறி உள்ளே நுழைதல், பொருட்களை சேதப்படுத்துதல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் ராஜ்மோகன் உள்பட 20 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், அமைச்சர் செல்வியின் பாதுகாப்பில் ராஜ்மோகன் இருப்பதாக கூறப்படுகிறது. சிதம்பரம் விஎஸ்ஆர் நகரில் உள்ள ராஜ்மோகன் வீட்டில் அமைச்சர் செல்வி ராமஜெயம் நேற்று இரவு வந்து தங்கியுள்ளார். தன் மருமகன் ராஜ்மோகனை கைது செய்யக்கூடாது என கூறி உயர் போலீஸ் அதிகாரிகளை அவர் மிரட்டியதாக தெரிகிறது. அவர் சிதம்பரத்திலேயே தங்கி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாலு, முருகன் மீது வழக்கு போடும் வேலைகளில் போலீசார் இறங்கியுள்ளதாகவும் தெரிகிறது.

0 comments: