Saturday 20 August 2011

இலவச கிரைண்டர் செப். 15க்குள் தயாரிக்க சிக்கல்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
குடும்பங்களுக்கான இலவச வெட் கிரைண்டர் திட்டம் செப்டம்பர் 15ல்
தொடங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக 25 லட்சம் குடும்பங்களுக்கு கிரைண்டர் வழங்கப்பட உள்ளது. கிரைண்டர் தயாரிக்க டெண்டரில் பங்கேற்ற கோவையை சேர்ந்த எல்ஜி, பிவிஜி, சாஸ்தா, பொன்மணி, விஜயலட்சுமி, சென்னையில் பட்டர்பிளை, ஜோதி, ஈரோட்டில் அமிர்தா, சவுபாக்கியா, நெல்லையில் ஐடியல் ஆகிய 10 நிறுவனங்கள் தேர்வாகின.




ரூ.2620க்கு கிரைண்டர் தயாரிப்பது இயலாத காரியம் என்று டெண்டரிலிருந்து ஐடியல், எல்ஜி நிறுவனங்கள் அப்போதே விலகின. கோவை மாவட்ட வெட்கிரைண்டர் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘விலகிக்கொண்ட நிறுவனங்கள், டெண்டரில் இணைந்து 9 லட்சம் கிரைண்டரை உற்பத்தி செய்து தருவதாக கூறியிருந்தன. தற்போது, 9 லட்சம் கிரைண்டரை மீதமுள்ள 8 நிறுவனங்கள் தயாரித்து தர கோரும் யோசனையில் அரசு உள்ளது. அரசு நிர்ணயித்துள்ள அளவு கிரைண்டர் தயாரிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்’’ என்றார்.

0 comments: