Wednesday 20 July 2011

மாணவர்களின் எதிர்காலத்தை எண்ணி தமிழக அரசு செயல்பட வேண்டும்: அரசியல் கட்சிகள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னை உயர்நீதிமன்றம் சமச் சீர் கல்வித் திட்டத்தை உடனடி யாக
அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு தீர்ப்புக் கூறியுள்ளது அதிமுகவுக்கு விழுந்த பெரிய அடியாக அக் கட்சி கருதுகிறது.
இந்நிலையில் இதுபற்றிக் கருத்துக்கூறிய திமுக தலைவர் மு.கருணாநிதி, “இந்தத் தீர்ப்பு யாருக்கும் வெற்றியையோ தோல்வியையோ பெற்றுத் தந்து விடவில்லை.
“உயர் நீதிமன்றத்தின் இந்த நல்ல தீர்ப்பு, ஏழை மற்றும் நடுத் தர மாணவருக்குக் கிடைத்த வரப்பிரசாதமாக தமிழக அரசு கருத வேண்டும். இந்தத் தீர்ப்பு எதிர்கால சமுதாயத்திற்கு வழங் கப்பட்ட வழிகாட்டுதலாக கருதப் பட வேண்டும்,” என்று கூறி
யுள்ளார்.
சமச்சீர் கல்வி வழக்கில், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்தும், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தமிழக முதல்வர் ëஜயலலிதா, அனைத்துத்துறை அமைச்சர்களிடமும் ஆலோ சனை நடத்தினார். அதன்பின் தமிழகக் கல்வி அமைச்சர்
சி.வி. சண்முகம் மற்றும் மாநிலப் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா ஆகியோரை, உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய் வதற்காக புதுடெல்லி அனுப்பி வைத்துள்ளதாகக் கூறப்படு கிறது.
இந்நிலையில் தமிழகத்தின் பாமக, காங்கிரஸ், திமுக, இடது சாரிகள், விடுதலைச் சிறுத்தை கள் ஆகிய கட்சிகள் அதிமுக மேல்முறையீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளன.
மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது என் பது மாணவர்களின் கல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் செயல் படும் பிடிவாதப் போக்கை வெளிப்படுத்துகிறது.
மாணவர்களின் எதிர்காலத் தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பெருந்தன்மையோடு இப்பிரச்சினையை அணுக வேண்டும் என்றும் அக்கட்சிகள் கேட்டுக்கொண்டுள்ளன.
இந்நிலையில் சமச்சீர் கல்வியை விரும்பும் சிலர்,  மேல்முறையீட்டின் பிறகு பிறப்பிக்கப்படும் உத்தரவைத் தடுக்கும் விதத்தில் மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

1 comments:

said...

அம்மான்னா சும்மாவா...