Tuesday 19 July 2011

சன் டிவி சிஇஓ ராஜினாமா

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தின் சிஇஓ திடீர் ராஜினாமா செய்ததை அடுத்து
அதன் தலைமை அதிகாரி (சிஓஓ) புதிய சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக தயாநிதி மாறன் தமது பதவியை ராஜினாமா செய்த நேர்ந்தது.
.
அவர் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்தை விற்க நிர்ப்பந்தித்தது தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஏர்செல் நிறுவனத்தை வாங்கிய சிங்கப்பூரை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் சன் டி.டி.எச். நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

இது தொடர்பாக தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐ இந்த அம்சம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறது.இதனிடையே சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சச்ஸேனா மீதும் மோசடி புகார்கள் கூறப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். திரைப்பட வினியோகம் தொடர்பாக அடுக்கடுக்கான புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.

இந்த விவகாரத்தால் சன் டிவி பங்குகளின் விலை சரிந்தது. இந்நிலையில் சன் டிவி சிஇஓ அஜெய் வித்யாசாகர் ராஜினாமா செய்திருக்கிறார். இதனையடுத்து சிஓஓவாக இருந்த கே.விஜயகுமார் புதிய சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை சன் டிவி மும்பை பங்குச் சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

0 comments: