Sunday 17 July 2011

கமல்ஹாசன் மீதான வருமான வரி வழக்கு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நடிகர் கமல்ஹாசனின் புகழ்ப்பெற்ற ‘குருதிப்புனல்’ திரைபடத்தின் வெளிநாட்டு வருவாய்
தொடர்பாக வருமான வரித்துறை வழக்குத் அவர் மீது தொடர்ந்திருந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நடிகர் கமல்ஹாசன் குருதிப் புனல் படத்தின் வெளிநாட்டு உரிமையை மாற்றியதில் ரூ.54.50 லட்சம் வரி விலக்கு கோரியிருந்தார். ஆயினும் வருமான வரித்துறை இதனை எதிர்த்து தீர்ப்பாயம்  மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் நடிகர் கமல்ஹாசனுக்குச் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனை எதிர்த்து வழக்கை வருமான வரித்துறை உச்சநீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றது. இதனிடையே இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வெறும் பெயர் மாற்றத்திற்காக மட்டும் இந்த விலக்கை கமல்ஹாசன் கோருவது நியாயமில்லை என்று வருமான வரித்துறை வாதிட்டது.
ஆனாலும், வருவான வரித்துறையின் அப்பீல் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தது.

0 comments: