Sunday 17 July 2011

சாதிக் பாட்சா மரணம்: போலிஸ் அதிகாரியை விசாரிக்க சிபிஐ முடிவு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா, கடந்த மார்ச் மாதம்   18-ந்தேதி மர்மமான முறையில் இறந்தார். தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் அவர் தூக்கில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சாதிக் பாட்சாவின் மர்ம மரணம் குறித்து, சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக, சிபிஐ அதிகாரிகள் ஆதாரங் களைத் திரட்டி வருகின்றனர்.  
 பாட்சா, மர்மமான முறையில் இறந்த அன்று, அவரது வீட்டில் சாதிக் பாட்சா நண்பர்கள் 3 பேர் இருந்துள்ளனர். அவர்கள், போலிஸ் உயர் அதிகாரி ஒரு வருடன் கைத்தொலைபேசியில் அடிக்கடி பேசி உள்ளனர்.
சாதிக் பாட்சா மரணத்திற்கு முன்பும், மரணத்திற்கு பின்னரும் குறிப்பிட்ட அந்த போலிஸ் அதிகாரிக்கு இவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த போலிஸ் அதிகாரிக்கும், சாதிக் பாட்சாவின் நண்பர்களுக் கும் இடையே நடந்த உரையாடல் பதிவுகளைக் கேட்டு, சம்பந்தப் பட்ட தொலைபேசி சேவை நிறு வனத்துக்கு கடிதம் எழுதி உள்ளனர். 
சாதிக் பாட்சாவின் உடல் கிரீம்ஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்தி லேயே, அந்த போலிஸ் அதிகாரி அங்கு சென்று உள்ளார்.
இது சிபிஐ அதிகாரிகளுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
சாதிக் பாட்சாவின் நண்பர்கள் அந்த போலிஸ் அதி காரியுடன் எதற்காகப் பலமுறை பேசினர் என்பதும் மர்மமாக உள்ளது.
சாதிக் பாட்சா விவகாரம் தொடர்பாக, சமீபத்தில் சிபிஐ அதிகாரிகள் முன்பு போலிஸ் அதிகாரி ஒருவர் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்தார்.
அப்போது குறிப்பிட்ட போலிஸ் அதிகாரி குறித்து பல்வேறு தகவல்களை அவர் கூறியுள்ள தாகத் தெரிகிறது.
இந்த ஆதாரங்களின் அடிப் படையில், சம்பந்தப்பட்ட உயர் போலிஸ் அதிகாரியிடமும், சாதிக் பாட்சாவின் நண்பர் ஒரு வரிடமும் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
விசாரணைக்கு முன்னிலை யாகுமாறு அவர்கள் இருவருக் கும் விரைவில் அழைப் பாணை அனுப்பப்பட உள்ளது.
இந்த விசாரணைக்கு பின்னர் சாதிக் பாட்சா மரணம் தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் வெளி யாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

0 comments: