Saturday 16 July 2011

13 மற்றும் 26-ஆம் தேதிகளிலேயே தாக்குதல் நடத்துவதின் மர்மம் என்ன?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
டெல்லி: இந்தியாவில் தீவிரவாதிகள் நடத்தும் பெரும்பாலான தாக்குதல்கள் 13 அல்லது 26-ஆம்
தேதிகளிலேயே நடத்தப்படுவதின் மர்மம் என்ன என்ற குழப்பத்தில் இந்திய போலீசார் ஆழ்ந்துள்ளனர்.
இது தவிர  மேற்குறிப்பிட்ட இந்த தேதிகளில் பெரும்பாலும் இந்தியன் முஜாஹிதீன் மற்றும் லஷ்கர் தீவிரவாத அமைப்பினர் தாம் தாக்குதல் நடத்துகின்றனர். இதுவரை கைது செய்யப்பட்ட இந்த அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகளிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையிலும் இதற்கான காரணத்தை அறியமுடியவில்லை.
13 மற்றும் 26-ஆம் தேதிகளில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்களின் பட்டியல் பின்வருமாறு அமைகிறது.
-கடந்த 2008-ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் தேதி ஜெய்ப்பூரில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வெடித்ததில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதே ஆண்டு ஜூலை மாதம் 26-ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய 21 குண்டு வெடிப்புகளில் 57 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து கடந்த 2010-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி புனே நகரில் அமைந்துள்ள ஜெர்மனி பேக்கரியில் நடந்த குண்டு வெடிப்பில் 17 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுடனான நேரடி தொடர்பு எதுவும் இல்லாமல் இந்தியன் முஜாஹிதீன் அமைப்புடன் இணைந்து லஷ்கர் இ தொய்பா அமைப்பு இந்த நாசவேலையில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: