Sunday 10 July 2011

உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மென் பானங்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
குளிர் பானம் எனப்படும் மென் பானங்களை அடிக்கடி அருந்துவது
என்பது சிறியவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் மிக விருப்பமான ஒன்றாகும்.
இந்த மென்பானங்களை அடிக்கடி அருந்தி வந்தால் உடல் நிலை பாதிக்கும் என சுவிஸ் ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது.
இனிப்பு மென் பானங்கள் உடல் பருமனுக்கு காரணமாக அமைகிறது. அதே போன்று உடல் வளர்சிதை மாற்ற நிகழ்விலும் மந்த நிலையை ஏற்படுத்துகிறது. ஆரோக்கியமான இளைஞர்கள் ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களிடம் தொடர்ந்து உடல்நிலை பாதிப்பு, சர்க்கரை பானங்கள் அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
சூரிச் பல்கலைக்கழகம் தலைமையிலான தற்போதைய ஆய்வில் மிதமான சர்க்கரை பொருட்களான பிரக்டோஸ், குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் பானங்களை அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆராய்ச்சி ஆய்வாளர் காஸ்பர் பெர்னிஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆய்வின் போது சராசரியாக 26 வயதுக்கு உட்பட்ட 29 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தினமும் 600 மி.லி மென் பானங்கள் தரப்பட்டன. அப்போது தொடர்ந்து மென் பானங்கள் அருந்துவதால் உடல் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுவது தெரியவந்தது.
இந்த புதிய ஆய்வு அறிக்கை ஊட்டசத்து தொடர்பான அமெரிக்க இதழில் வெளியாகி உள்ளது. ப்ரக்டோஸ் பானங்கள் குடிப்பதால் குளுக்கோஸ் எரிசக்தியாக மாறுவதில் தாமதம் ஏற்படுவதுடன், மாவுச்சத்து எனப்படும் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியது

0 comments: