Thursday, 7 July 2011

தி.மு.க விற்க்கு கடும் நெருக்கடி ,மாறன் பதவி விலகல்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இன்று பகல் 11 மணிக்கு மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தயாநிதிமாறனும் கலந்து கொண்டார். அப்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்து பிரதமர் மன் மோகன்சிங்கிடம் கடிதம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தயாநிதிமாறன் ராஜினாமா கடிதம் எதுவும் கொடுக்கவில்லை. மந்திரிசபை கூட்டம் முடிந்ததும் அவர் ரேஸ் கோர்ஸ் இல்லத்தில் இருந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.  
 
இன்று மதியம் 1.30 மணி அளவில் தயாநிதி மாறன் திடீரென மீண்டும் பிரதமரை சந்திக்க ரேஸ் கோர்ஸ் இல்லத்துக்கு சென்றார். 1.45 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தார். அவர்கள் இருவரும் சுமார் 5 நிமிடம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தயாநிதி மாறன் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார்.
 
அவரது ராஜினாமாவை பிரதமர் மன்மோகன்சிங் ஏற்றுக்கொண்டார். ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் மத்திய மந்திரி பதவியை இழக்கும் 2-வது நபர் தயாநிதி மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
முன்னதாக மத்திய மந்திரி சபையில் இருந்து தயாநிதி மாறனை நீக்க சம்மதம் தெரிவித்து சோனியா காந்திக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கடிதம் எழுதி அனுப்பி உள்ளதாக டெல்லியில் இருந்து வெளியாகும் பயோனீர் என்ற ஆங்கிலப் பத்திரிகையில் தகவல் வெளியாகியுள்ளது.
 
அந்த கடிதத்தை டி.ஆர்.பாலு எம்.பி. இன்று (வியாழன்) சோனியாவிடம் ஒப்படைப்பார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், ராஜாங்க நிதி மந்திரி பழனி மாணிக்கத்தையும் பதவியில் இருந்து நீக்கி விட்டு, டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோரை மந்திரிகள் ஆக்க கருணாநிதி அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அந்த தகவலில் குறிப்பிட்டுள்ளது. இதனல் திமுக  விற்க்கு கடும் நெருக்கடி ஏற்ப்பட்டுள்ளது மேலும் இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் தும்மம்குறிச்சி என்ற இடத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு நித்யானந்தா தியான பீடத் தலைவர் டாக்டர் ஸ்ரீநித்ய சர்வானந்தா இன்று எழும்பூரில் உள்ள சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
 
அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
 
நித்யானந்தா ஆசிரமத்துக்கு தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கான சீடர்கள் உள்ளனர். சாதி, மத வேறுபாடியின்றி எங்களது ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. மருத்துவமனைகள், பள்ளிகள் உள்பட பல்வேறு அமைப்புகளை அமைத்து நாங்கள் மக்கள் நலப் பணிகளை செய்து வருகிறோம். ஆசிரமத்துக்கு சொந்தமாக நிறைய யோகா மையங்களும் உள்ளன. எங்கள் ஆசிரம தலைமை பீட குருவாக நித்யானந்த பரமஹம்சர் உள்ளார்.  
 
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2-ந் தேதி 8.30 மணிக்கு சன் டி.வி.யில் சிறப்பு ஒளிபரப்பு என்ற பெயரில் தமிழ் நடிகை ஒருவருடன் எங்களது குரு நித்யானந்தா இருப்பது போன்று காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இது இந்து சமயத்துக்கு எதிரானது. திட்டமிட்டு இந்த காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதற்கு சன் டி.வி. தலைவரும், நிர்வாக இயக்குனருமான கலாநிதி மாறன், செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா ஆகியோர் தூண்டுதலாக இருந்தனர். சன் டி.வி. மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ஆகிய 2 சானல்களிலும் இந்த காட்சிகள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டன.  
 
சேலம், நாமக்கல், கோவை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, ராஜபாளையம், சென்னை, காஞ்சீபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் உள்ள எங்களது யோகா மையங்களில் நுழைந்து சில குண்டர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த காட்சிகளை சன் டி.வி. காமிராமேன்கள் படம் பிடித்தனர்.
 
எங்களது யோகா மையத்தில் இருந்த பெண் சீடர்களிடம் அவர்கள் அநாகரீகமாக நடந்து கொண்டனர். சில பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டனர்.  
 
ஆபாச வீடியோ காட்சிகள் ஒளிபரப்பான தினத்தன்று இரவில் சி.எம்.சிவபாபு என்பவருடன் சில கூலிப்படையினர் திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்குள் அத்துமீறி புகுந்து அங்கு இருந்தவர்களை தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். அதோடு பெண்களிடமும் தவறாக நடந்தனர். அப்போதும் சன் டி.வி. காமிராமேன்கள் படம் பிடித்தனர். 
 
இந்த வீடியோ ஒளிபரப்பு ஆவதற்கு முன்பு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில் கலாநிதி மாறனின் சகோதரர் தயாநிதி மாறனுக்கு தொடர்பு இருப்பதாக பொது மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. இதை மூடி மறைக்கவும், பொதுமக்கள் கவனத்தை திசை திருப்பவும், ரஞ்சிதா-நித்யானந்தா ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.
 
எங்கள் ஆசிரமம் மீதான தாக்குதல்கள் தொடர்பாகவும், வீடியோ காட்சிகள் வெளியானது. குறித்தும் எங்கள் ஆசிரம சீடர்கள் புகார்கள் கொடுத்தனர். ஆனால் எங்கள் புகார்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.  
 
ஏனெனில் அப்போது ஆட்சி, அதிகாரம் இருந்தது. தற்போது பொறுப்பு ஏற்றுள்ள புதிய அரசு மூலம் உரிய நீதி எங்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த நீதியை எதிர்பார்த்து புகார் கொடுத்துள்ளோம். எனவே கலாநிதி மாறன், சக்சேனா ஆகியோர் மீது வன்முறையைத் தூண்டியதாகவும், ஆபாச காட்சியை வெளியிட்ட குற்றத்துக்காகவும், உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம்.
 
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
 
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-  
 
கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ந் தேதி சன் டி.வி.யில் எங்களது குரு நாதர் நித்யானந்தா பற்றி அவதூறான செய்திகள் ஒளிபரப்பு செய்யப்பட் டன. எனவே சன் டி.வி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்துள்ளோம்.
 
கேள்வி:- புகார் மனுவில் யாருடைய பெயர்களையாவது குறிப்பிட்டுள்ளீர்களா?
 
பதில்:- சன் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறன், மற்றும் சக்சேனா ஆகியோரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
இவ்வாறு அவர் கூறினார்.  
 
அவரிடம் நிருபர்கள் ஆபாச காட்சிகள் தொடர்பாக மேலும் சில கேள்விகளை கேட்டனர். அதற்கு சுவாமி நித்ய சர்வானந்தா இன்று மாலை 4.30 மணிக்கு சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது விரிவான தகவல்களை சொல்கிறேன் என்றார். சுவாமி நித்யசர்வானந்தாவுடன், நித்யானந்தா ஆசிரம பீடத்தை சேர்ந்த ஏராளமான ஆண்-பெண் சீடர்கள் வந்திருந்தனர்.
 

 

0 comments: