இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
OIC எனப்படும் அனைத்துலக இஸ்லாமிய மாநாடு இனி அனைத்துலக இஸ்லாமிய கூட்டுறவு இயக்கமாக பெயர் மாற்றம் கண்டுள்ளது. இம்முடிவு இன்று அனைத்துலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் 38வது பகுதி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக ரஷ்ய செய்தி நிறுவனம் கூறியது.
இனி இம்மாநாடு புதிய பெயருடன் இயங்கும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதாக அம்மாநாட்டின் தலைவர் Erzhan Kazykhanov கூறினார். இந்த புதிய பெயர் மாற்றம் இஸ்லாமிய சமுகத்தினரிடையே நாகரிகத்தையும், போட்டி மனப்பான்மையையும் உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.
அஸ்தானாவில் இம்முறை அனைத்துலக இஸ்லாமிய மாநாடு நடத்தப்படுவதன் மூலம் கிழக்கு மற்றும் மேற்கு இஸ்லாமிய நாடுகளில் நிலவும் மத ரீதியான பிரச்சனைகளை களைவதற்கான பாலமாக அமையும் என்று அவர் விளக்கமளித்தார்.
இம்முறை நடந்த OIC மாநாட்டில் லிபியாவின் மேம்பாட்டுத் திட்டங்கள், மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளில் வரலாற்று மாற்றங்கள் குறித்தும் அலசி ஆராயப்பட்டது.
0 comments:
Post a Comment