Tuesday, 28 June 2011

காங்கிரஸ் கட்சிக்கு இனி ஆதரவு அளிக்க மாட்டேன்: ஜெயலலிதா

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தேசிய அரசியலில் நுழையும் எண்ணமில்லை எனவும், தேசிய அளவில் 3வது அணி அமையுமா என்பதை எதிர்காலம் என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது தொடர்பாக பேட்டியளித்த முதல்வர் ஜெயலலிதா காங்கிரசுக்கு ஆதரவளிப்பேன் என கடந்த 2010ம் ஆண்டு கூறினேன். 2010க்கு பிறகு சூழ்நிலைகள் மாறிவிட்டன.
தி.மு.க.வுடன் காங்கிரஸ் தொடர்ந்து கூட்டணியில் உள்ளது. என்னுடைய ஆதரவை ஏன் ஏற்கவில்லை என காங்கிரஸ் கட்சியிடம் தான் கேட்க வேண்டும். ஆதரவளிப்பது என்பது அப்போது எடுக்கப்பட்ட முடிவு.
தற்போது அது போன்ற சூழல் நிலவவில்லை. ஊழல்வாதிகளுக்கு எதிராக பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக பிரதமரின் நடவடிக்கை தேவை.
தயாநிதி பதவி விலக வேண்டும் என நான் கூறியுள்ளேன். தயாநிதி பதவி நீக்கப்படுவாரா என பிரதமர் தான் விளக்கமளிக்க வேண்டும்.
தேர்தலில் மோசடி செய்து சிதம்பரம் வெற்றி பெற்றுள்ளார். சிதம்பரம் தேர்தலில் தோல்வியடைந்தது தான் உண்மை. அடுத்த தேர்தலுக்குள் கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படலாம். இது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது.
அரசியலில் எதுவும் நிகழலாம். மாற்றம் என்பதே அரசியலில் சூத்திரமாக உள்ளது. அரசியலில் ஒருவர் நெகிழ்ந்து கொடுக்க வேண்டும். அரசியலில் இது போன்ற சூழ்நிலைகள் ஏற்படும் போது அதனை சமாளிக்கும் திறன் எங்களுக்கு உள்ளது.
அனைத்து அரசியல் கட்சிகளிலும் எனக்கு நண்பர்கள் உள்ளனர். 3வது அணி அமையும் என்பதை எதிர்காலம் என்ன சொல்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்க்க தேவையில்லை. ஒரு கட்சி ஆட்சி என்பது முடிந்து விட்டது.
கூட்டணி கட்சிகள் இல்லாமல் எந்த கட்சியும் நீண்ட நாட்கள் ஆட்சி நடத்த முடியாது. தேசிய அரசியலில் நுழையும் எண்ணமில்லை தேசிய அரசியல் குறித்த குறிக்கோள் எதுவும் இல்லை. எதிர்கால இந்தியா குறித்த எண்ணம் எனக்கு உண்டு. என்னை பற்றி இல்லை என ஜெயலலிதா கூறினார்.

0 comments: