Tuesday 7 June 2011

தயாநிதி மாறனை தீவிரமாக நெருங்குகிறது சி.பி.ஐ

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
டெல்லி: ஏர்செல் நிறுவனம் தொடர்பாக எழுந்த சர்ச்சையின் காரணமாக தயாநிதி மாறனுக்கு எதிராக சிவசங்கரன் அளித்துள்ள வாக்குமூலம் முக்கிய சாட்சியமாக மாறுகிறது. இதன்மூலம் ஏர்செல் நிறுவனத்திற்கு ச்பெக்ட்ரம் 2ஜி லைசன்ஸ் தரப்பட்ட விவகாரத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய சி.பி.ஐ தயாராகிவிட்டது. இருப்பினும் பிரதமரின் அனுமதிக்காக சி.பி.ஐ அமைதிகாத்து வருவதாகக் கூறப்படுகிறது.
தயாநிதிமாறன் ஏர்செல் அதிகாரியாக இருந்தபோது ஏர்செல் நிறுவனம் சிவசங்கரன் பேரில் இருந்தது.அப்போது சிவசங்கரன் 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கோரி விண்ணப்பித்தபோது தயாநிதி மாறன் லைசென்ஸ் தரவில்லை. அதுக்குப் பதிலாக மலேசியாவைச் சேர்ந்த மாக்சிஸ் நிறுவனத்திடம்  ஏர்செல் நிறுவன பங்குகளை விற்குமாறு நிர்பந்தம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, வேறு வழி தெரியாமல் ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் தனது நிறுவன பங்குகளை மாக்சிஸ் நிறுவனத்தின் தலைவர் ஆனந்தகிருஷ்ணனிடம் விற்றுவிட்டார்.
மலேசிய தொழிலதிபரான ஆனந்தகிருஷ்ணன் , சன் டி.வி நிறுவனரான கலாநிதிமாறனுடன் நெருக்கமானவர். ஏர்செல் நிறுவனம் மாறிய உடனேயே 14 லைசென்சுகள் வழங்கப்பட்டது. அடுத்த சில மாதங்களில் சன் டி.வி யின் சன் டைரக்ட் நிறுவனத்தில் ரூ 800 கோடியை மக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்தது. இதுவே தற்போது சர்ச்சையாகி தயாநிதி மீது வழக்கு தொடரும் நிலைக்கு வந்துள்ளது. இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ நேற்று சிவசங்கரனிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தியது. விசாரணையின் போது என்ன நடந்தது என்பது பற்றி சிவசங்கரம் வாக்குமூலம் அளித்தார்.
“சிவசங்கரன் எனக்கு அளித்த நெருக்கடியால் தயாநிதிமாறன் எனது கழுத்தை நெரிப்பது போல் உணர்ந்தேன். தயாநிதிமாறனின் செல்வாக்கு காரணமாக எனது விண்ணப்பங்களை மத்திய தொலைத்தொடர்புத் துறை நிராகரித்து விட்டது. இதனைத்தொடர்ந்து வேறுவழியின்றி நான் மலேசிய தொழிலதிபர் ஆனந்தகிருஷ்ணனிடம் ஏர்செல்லை விற்க முடிவு செய்தேன் என்று சிவசங்கரன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சிவசங்கரனின் வாக்குமூலத்தை முக்கிய சாட்சியமாக சி.பி.ஐ பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் தற்போது பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு பதிலுக்காகக் காத்திருக்கிறது. பிரதமரின் அனுமதி கிடைத்தவுடன் மத்திய ஜவுளி துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது வழக்கு பதிவு செய்யப்படும். தொடர்ந்து அவரை நேரில் வரவழைத்து சிபிஐ விசாரணை நடஹ்தும் என்றும் நம்பப்படுகிறது.

0 comments: