Wednesday, 8 June 2011

சரிவை நோக்கி ஒபாமா

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
வாஷிங்டன்: அல்கெய்டா தீவிரவாதி ஒசாமா பின் லேடனை தமது அமெரிக்கப் படைகளின் மூலம் பாகிஸ்தானில் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு ஓங்கிருந்தது. ஆயினும் அமெரிக்க பொருளாதார நிலையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக, அமெரிக்காவில் வேலை வாய்ப்பு குறைந்து வருவதால் ஒபாமாவின் செல்வாக்கு குறைந்து வருகிறது.
இதனிடையே அடுத்தாண்டு அமெரிக்காவில்  அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இத்தேர்தலில் ஒபாமாவும் குடியரசு தலைவர்கள் சிலரும் போட்டியிடும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மாசாசூயட்ஸ் மாநில கவர்னர் மிட் ரோனி, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகிறார். கணிசமான வேலைவாய்ப்புகள், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை உயர்த்துவதே தமது லட்சியம் என அவர் பிரச்சாரம் செய்வதால், அவருக்கு ஆதரவு அதிகரித்து  வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் எதிர்வரும் தேர்தலில் பரபரப்பு நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments: