Tuesday 7 June 2011

மு.க.அழகிரி நீதிமன்றத்தில் சரண்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி மதுரை மாவட்டம் மேலூர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். பின்னர் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது மேலூர் அருகே கோவிலில் ஏற்பட்ட தகராறில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் பி.எம்.மன்னன் உட்பட 6 பேர் மீது மேலூர் தாசில்தார் காளிமுத்து அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் திடீரென காளிமுத்து தான் அளித்த வழக்கை திரும்பப் பெறுவதாக கூறினார். அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. வழக்கு விசாரணையில் உள்ளது. இந்நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த அடிப்படையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உட்பட 6 பேரும் மதுரை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றிருந்தனர். முன்ஜாமீன் வழங்கப்பட்டதன் பேரில் மதுரை மேலூர் நடுவர் நீதிமன்ற நீதிபதி யாத்மின் முன்பு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் ஆகிய இருவர் மட்டும் இன்று காலை ஆஜரானார்கள்.
இதையடுத்து இருவரையும் ஜாமீனில் செல்ல நீதிபதி உத்தரவிட்டார். அழகிரி வந்ததால் மேலூர் நீதிமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கான திமுகவினர் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

0 comments: