Friday, 10 June 2011

அமெரிக்கப்படைகளின் தாக்குதலால் பாகிஸ்தானில் 22 பேர் பலி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இஸ்லாமாபாத்: அல்கெய்டா தீவிரவாதி ஒசாமா பின் லேடன் அமெரிக்கப் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டப்பின், அமெரிக்க ராணுவம், ஆளிள்ளா போர் விமானம் மூலம் நடத்தும் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனிடையே பாகிஸ்தானில் அத்துமீறி அமெரிக்கா தாக்குதல் நடத்துவதை இனி ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் அரசு எச்சரித்தது.
ஆயினும், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க இராணுவம் ட்ரோன் தாக்குதலை நிறுத்தியபாடில்லை. கடந்த வாரம் மட்டும் அமெரிக்க பாகிஸ்தானில் 5 முறை ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதில் சமீபத்தில், மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய காஷ்மீரிய தீவிரவாதி இறந்ததாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் அமெரிக்கா அதனை இன்னும் முடிவு செய்யவில்லை. இதனிடையே வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டின் மீது அமெரிக்க ட்ரோன் 4 ஏவுகணைகளை வீசியது. இதில் 18 தீவிரவாதிகள் பலியாகின. அடுத்ததாக ஒரு கார் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் 4 திவிரவாதிகள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: