Friday, 10 June 2011

தயாநிதிமாறனை ராஜிநாமாவா

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தொலைத்தொடர்பு ஊழலில் தயாநிதிமாறனுக்கும் பங்கு உண்டு என்று குற்றச்சாட்டுகள் கூறப்படும் நிலையில் அமைச்சரவையில் அவர் நீடிப்பாரா என்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கேட்கப்பட்டது. ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தயாநிதிமாறனை ராஜிநாமா செய்யக் கோருவீர்களா என்று செய்தியாளர்கள் பிரதமரிடம் கேட்ட போது அனைத்து விவகாரங்களையும் சட்ட அமலாக்க அமைப்புகள் கவனித்து வருகின்றன. அவர்கள் அச்சமின்றியும், பாரபட்சமில்லாமலும் பணிபுரிய அனுமதிக்கப்படுவர் என்று மட்டும் தெரிவித்தார்.
முன்னதாக ஏர்செல் நிறுவனர் சிவசங்கரனை வற்புறுத்தி மேக்ஸிஸ் நிறுவனத்திடம் விற்கச் செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டை தயாநிதி மாறன் மறுத்து அறிக்கை வெளியிட்டார். ஒருவாரத்தில் அவர் இவ்வாறு அறிக்கை வெளியிடுவது இது இரண்டாவது முறையாகும்.
இந்த விவகாரம் தொடர்பாக சிவசங்கரனிடம் சி.பி.ஐ விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றதையடுத்து தயாநிதி மாறன் இவ்வாறு அறிக்கை வெளியிட்டார்.

0 comments: