Saturday 14 May 2011

இரண்டாவது முறையும் தப்பிப் பிழைத்த கனிமொழி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
2ஜி ஊழல் வழக்கு விசாரணைக்காக டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார் கனிமொழி. கனிமொழியின் ஜாமின் மனு மீதான விசாரணை வருகிற 20ம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கனி‌மொழியின் கைது நடவடிக்கை தற்காலிகமாக தள்ளிப் போய் உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் பலத்த பின்னடைவை சந்தித்த தி.மு.க.வுக்கு சற்று ஆறுதலாக கனிந்துள்ளது.
2ஜி வழக்கில் 2வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சி.பி.ஐ கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரரான கனிமொழி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுச் சதியாளர் என குற்றஞ்சாட்டியிருந்தது.
மேலும் கனிமொழி கலைஞர் தொலைக்காட்சியின் மூளையாக செயல்பட்டதாகவும் கூறியிருந்தது. இந்நிலையில் கடந்த 6ம் திகதியன்று சி.பி.ஐ சம்மனை ஏற்று கனிமொழியும், கலைஞர் தொலைக்காட்சியும்., நிர்வாக இயக்குநருமான சரத்குமாரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
கனிமொழி தரப்பில் ராம் ஜேத் மலானி ஆஜராகி வாதாடினார். கனிமொழிக்கு ஜாமின் அளிக்கும்படி கூறினார். இந்நிலையில் கனிமொழி ஜாமின் மனு மீதான தீர்ப்பை இன்றைக்கு(14ம் திகதி) ஒத்திவைத்து சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேர்தல் தோல்வியால் நெருக்கடியில் இருக்கும் தி.மு.கவுக்கு கனிமொழியின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது ஆறுதல் முடிவாக அமைந்துள்ளது. கடந்த 6ம் திகதியே கனி‌மொழி கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கனிமொழி தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டதால் அவர் தப்பித்தார். இன்று ஜாமின் மனு மீதான் தீர்ப்பு 20ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் 2வது முறையாக தப்பித்துள்ளார்.

0 comments: