Sunday 29 May 2011

தவறு செய்தால் கண்டிக்க தயங்க மாட்டோம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மதிமுக 18ம் ஆண்டு துவக்க விழா  சென்னை சைதைப்பேட்டையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு வைகோ , நாங்கள் திமுக அதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறோம். அவ்வாறு சேர்ந்ததால் நான் மதிப்பிழந்திருக்கிறேன். மரியாதை இழந்திருக்கிறேன். பரிகாசத்துக்கு ஆளாகியிருக்கிறேன். அவ்வாறு கூட்டணி சேர்ந்ததை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. எனினும் நாம் அழித்து ஒழிக்கப்படக்கூடிய நிலை வரும்போது தற்காலிகமாக, சமரசம் செய்துக்கொள்வதில் தவறில்லை என பகத்சிங் கூறியிருக்கிறார். எங்களுக்கும் அத்தகைய சூழ்நிலை வந்தபோதுதான் தற்காலிகமாக சமரசம் செய்துகொள்ள கூட்டணி வைத்தோம். முன்பு அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தபோது நாங்கள் பணத்துக்காக சேர்ந்தோம் என வீண்பழி சுமத்தப்பட்டோம். ஆனால் கடந்த தேர்தலில் பங்கேற்கப்போவதில்லை என்ற எங்கள் முடிவின் மூலம் அந்தப் பழி துடைக்கப்பட்டிருக்கிறது. மதிமுக வளர்வதும் வலிமை பெறுவதும் தமிழகத்துக்கும் தமிழகத்தின் எதிர்காலத்திற்கும் நல்லது. எனவே தமிழக மக்கள் எங்களை ஆதரிக்க வேண்டும். மதிமுக மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுக்கும். தமிழகத்தின் அரசியல் அதிகாரம் ஒரு நாள் எங்களுக்கும் வரும்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் பெரும் மௌனப் புரட்சி செய்து ஜனநாயகத்துக்கு மகுடம் சூட்டியிருக்கிறார்கள். தற்போது பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசு நல்லது செய்தால் ஆதரிப்போம். தவறு செய்தால் கண்டிக்க தயங்க மாட்டோம் என்றார்.

0 comments: