Saturday 28 May 2011

பத்தாம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்று இரட்டையர்கள் சாதனை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பத்தாம் வகுப்பு தேர்வில் கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் இரட்டை சகோதரிகள் மீனா- வீணா தலா 486 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர். புதுச்சேரி காந்தி நகரைச் சேர்ந்த இரட்டையர்கள் மீனா - வீணா. இருவருக்கும் இடையே 8 நிமிடங்கள் தான் வயது வித்தியாசம். மாணவியரின் தாயார் லதா குடும்பத் தலைவி. தந்தை ரகுநாத் தனியார் செக்யூரிட்டி நிறுவன ஊழியர்.
இவர்கள் இருவரும் புதுச்சேரி கதிர்காமம் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து வந்தனர். இவர்கள் இருவரும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
மீனா தமிழ்ப் பாடத்தில் 96 மதிப்பெண்களும், ஆங்கிலம் 97, கணக்கு 99, அறிவியல் 97, சமூக அறிவியல் 97 மதிப்பெண்களும், தங்கை வீணா தமிழ்ப் பாடத்தில் 97 மதிப்பெண்களும், ஆங்கிலம் 95, கணிதம் 100, அறிவியல் 96, சமூக அறிவியல் 98 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இவர்கள் இருவரும் தலா 486 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பெற்றனர். இரட்டை சகோதரிகளான இவர்கள் படிப்பது ஒரே பள்ளி, ஒரே வகுப்பு. இவர்கள் பெற்றதும் ஒரே மாதிரியான மதிப்பெண்கள். இவர்களின் இந்த ஒரே வகையான சாதனைகள் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது.
இதுகுறித்து மீனா, வீணா கூறியதாவது: நாங்கள் இருவரும் 6ம் வகுப்பு படிக்கும் பொழுதே எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் மாநில அளவில் தேர்ச்சி பெற வேண்டும் என திட்டமிட்டு படித்தோம். அதிகாலை 4 மணிக்கு எழுந்து இருவரும் சேர்ந்தே படிப்போம்.
ஒருவருக்கொருவர் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்வோம். கஷ்டப்பட்டு படித்தால் நிச்சயம் பலன் உண்டு என்பதை தேர்வு முடிவுகளால் அறிந்து கொண்டோம்.
இருவரும் பிளஸ் 2 வகுப்பில் உயிரியல் பிரிவு படித்து மருத்துவர் ஆக வேண்டும் என மீனாவும், மென்பொருள் பொறியாளராக வேண்டும் என வீணாவும் கூறினர். மாணவியருக்கு முதல்வர் ரங்கசாமி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

0 comments: