Monday 23 May 2011

திகார் சிறையில் கனிமொழியை சந்தித்தார் கருணாநிதி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
திமுக தலைவர் கருணாநிதி தனது மகள் கனிமொழியை தில்லி திகார் சிறையில் இன்று மாலை நேரில் சந்தித்துப் பேசினார்.
கருணாநிதியுடன் அவரது மனைவி ராசாத்தி அம்மாள், கனிமொழியின் கணவர் அரவிந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு ஆகியோர் உடன் வந்திருந்தனர்.கனிமொழியுடன் சிறிது நேரம் கருணாநிதி பேசிக் கொண்டிருந்தார். பின்னர், அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
திமுக எம்பி கனிமொழியை மத்திய அமைச்சர் அழகிரியின் மனைவி காந்தி இன்று தில்லி நீதிமன்றத்தில் சந்தித்தார்.இன்று காலை தில்லி வந்த காந்தி, தனது மகன் துரை தயாநிதி உள்ளிட்ட சிலருடன் பாட்டியாலா வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்துக்கு வந்தார். காந்தி நீதிமன்ற அறையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தவுடன் கனிமொழி நேராக அவரிடம் சென்றார். இருவரும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். ஆனால் சிறிதுநேரத்தில் காந்தி அழ ஆரம்பித்துவிட்டார்.எனினும் கனிமொழி உணர்வுகளை கட்டுப்படுத்தியவராக காந்தியிடம் பேசினார்.இருவரும் நீதிமன்ற பார்வையாளர் பகுதிக்கு சென்றனர். அங்கு கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள் அவரது பேரன் ஆதித்யாவுடன் அமர்ந்திருந்தார்.பின்னர் கனிமொழிக்கும், ராசாத்தி அம்மாளுக்கும் இடையே காந்தி அமர்ந்தார். சிறிதுநேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.கனிமொழி சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து கருணாநிதியின் குடும்பத்தினர் அவரை சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.
 

0 comments: