Sunday 22 May 2011

ரஜினி நலமுடன் இருப்பதான புகைப்படம் டுவிட்டரில் வெளியிட்டார் தனுஷ்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


நடிகர் ரஜினி உடல்நலக்குறைவால் கடந்த 13 ம் திகதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டொக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது காய்ச்சல் இருந்தது. நுரையீரலில் நீர்கோர்ப்பும் காணப்பட்டது. சிறுநீரகத்தில் லேசான பாதிப்பு ஏற்பட்டு காலில் வீக்கமும் இருந்தது. இதையடுத்து ரஜினிக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை மேற்கொண்டனர்.
தனி அறையில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அறுவைசிகிச்சை மூலம் நுரையீரல் நீர்கோர்ப்பு அகற்றப்பட்டது. டயாலிசிஸ் சிகிச்சையும் செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பின் ரஜினி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டொக்டர்கள் தெரிவித்தனர். அவர் இட்லி, வடை சாப்பிட்டதாகவும் கூறினர்.
ரஜினி நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் ரசிகர்கள் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ரஜினி உடல் நிலை குறித்து தவறான வதந்திகள் பரவி வருகின்றன. இதற்கு பதில் அளித்து நடிகர் தனுஷ் பேட்டி அளித்துள்ளார் அவர், ரஜினி நலமுடனும், தெம்புடனும் இருக்கிறார். விரைவில் பூரண குணமடைந்து திரும்புவார். அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவுகின்றன. அதனை ரசிகர்கள் யாரும் நம்ப வேண்டாம்.
ரஜினி நலம் பெற ரசிகர்கள் சிலர் தங்கள் உடலை வருத்தி வேண்டுதல் செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அவரவர் தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபடுமாறும் வேண்டிக் கொள்கிறேன் என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.
ரஜினியும், மகள் ஐஸ்வர்யாவும் பெருவிரலை உயர்த்தி காட்டுவது போன்ற படத்தையும் தனுஷ் தனது டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றார். ரஜினியின் உடல்நிலை குறித்து அவரது உதவியாளர் சுப்பையாவிடம் விசாரித்தார்.

0 comments: