Wednesday 18 May 2011

ஸ்பெக்ட்ரம்: சிபிஐ பிடி இறுகுகிறது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பான விசாரணை தீவிர மடைந்து வருகிறது. சிபிஐ எனப்ப டும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு, கருணாநிதியின் துணை வியார் ராசாத்தி அம்மாளின் கணக்குத் தணிக்கையாளரிடம் விசாரணை மேற்கொண்டது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங் களுக்குத் தயவு காட்டியதன் மூலம் கிடைத்த  பணம் எப்படியெல்லாம் கைமாறியது என்பது குறித்து மத்திய புலனாய்வுத் துறையும், வருமான வரித்துறையும் பலகட்டங் களாக விசாரணை நடத்தி வருகின்றன.
‘அன்பளிப்பாக’ கிடைத்த பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பப் பட்டதும், பிறகு மீண்டும் அந்தப் பணம் இந்தியாவுக்கே திரும்பி வரவழைக்கப்பட்டதும் விசாரணை யில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மொரிஷியஸ் மற்றும் வளைகுடா நாடுகளில் அடுத்தகட்ட விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.
இந்நிலையில் ‘டாடா டெலி சர்வீஸஸ்’ உரிமையாளரான ‘டாடா’ நிர்வாகத்தின் கீழ் இயங்கும்  ‘வோல்டாஸ்’ நிறுவனத்தின் சென்னை நிலம் பலரது கைக்கு மாறி, கடைசியில் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மா ளின் கணக்குத் தணிக்கையாளர் மலேசியா சரவணன் வசம் சென்றுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பயன் அடைந்ததற்காக இந்த நிலத்தை டாடா நிறுவனம் ராசாத்தி அம்மா ளுக்குத் தந்திருக்கலாம் என சிபிஐ சந்தேகிக்கிறது.
பின்னர் இந்த நிலம் மலேசியா வைச் சேர்ந்த சங்கல்பம் என்ற நிறுவனத்துக்கு கை மாறியதாகக் கூறப்பட்டது. இந்த மாற்றத்தை ராசாத்தி அம்மாளின் மற்றொரு கணக்குத் தணிக்கையாளரான ரத்தினம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இவற்றின் தொடர்பில் ராசாத்தி அம்மாளின் கணக்குத் தணிக்கை யாளர்கள் ரத்தினம், மலேசிய சரவணன் ஆகிய இருவரிடமும் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
கனிமொழி, கலைஞர் தொலைக் காட்சியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரின் முன் பிணை மனுக்கள் மீதான தீர்ப்பு,  நாளை மறுதினம் 20ம் தேதி வழங்கப்பட உள்ளது.
அப்போது ‘வோல்டாஸ்’ நிலம் கை மாறிய விதம் பற்றிய ஆவணங் களை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. இதனால் இந்த இருவருக்கும் முன்பிணை கிடைப் பதில் சிக்கல் எழக்கூடும்.
ராசாத்தி அம்மாளின் கணக்குத் தணிக்கையாளர் ரத்தினம் தான் கனிமொழியின் கணக்குகளையும் தணிக்கை செய்கிறார்.
நேற்று முன்தினம் ரத்தினத் திடமும், திகார் சிறையில் அடைக் கப்பட்டிருக்கும் முன்னைய தொலைத் தொடர்பு அமைச்சர் ராசாவின் கணக்குத் தணிக்கை யாளர் கணபதியிடமும் சிபிஐ விசா ரணை மேற்கொண்டது.
ஷாகித் பால்வாவின் ‘டிபி ரியாலிட்டி’ மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு 214 கோடி ரூபாய் கைமாறிய விவகாரம் தொடர்பாக ரத்தினத்திடம் விசாரிக் கப்பட்டது.
இப்பணம் கடனாகப் பெறப் பட்டது என்று கலைஞர் தொலைக் காட்சி சார்பில் கூறப்பட்டதால் அது தொடர்பான ஆவணங்கள் முழுவதையும் சிபிஐ சரிபார்த்து வருவதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கணக்குத் தணிக்கையாளர் கணபதியிடம், ராசாவின் வெளி நாட்டு முதலீடுகள் உள்ளிட்ட பல விவரங்களை சிபிஐ கேட்டதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத வருமான வரித்துறைக்கு இந்திய உச்ச நீதிமன்றம்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விஷயத் தில் வருமான வரித்துறை தூங்கி விட்டதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

0 comments: