Wednesday 4 May 2011

பின் லேடன் மரணம் உண்மையா? சந்தேகத்தைத் தீர்க்க அமெரிக்கா முடிவு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அமெரிக்க அதிரடிப் படையால் ஒசாமா பின் லேடன் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில்
பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவ வீரர்களால் சுடப்பட்டது பின் லேடன் இல்லை எனவும் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளியான படம் போலியானது என்றும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த சந்தேகங்களைத் தீர்க்க முடிவெடுத்துள்ள அமெரிக்கா அரசு பின் லேடனின் படங்களை வெளியிடலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறது என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு துறை துணை ஆலோசகர் ஜான் பிரினினன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அதிரடி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது ஒசாமா பின் லேடன் தான் என்பதில் யாரும் சந்தேகிக்க வேண்டாம். இந்த சந்தேகத்தைத் தீர்க்கவே, பின் லேடன் தங்கிருந்த அபோதாபாத்தில் நடந்த அதிரடி தாக்குதல் பற்றிய தகவல்களை வெளியிட முடிவு செய்துள்ளோம். அவ்வாறு வெளியிடும்போது, புகைப்படங்களையும் வெளியிடுவது பற்றி பரிசீலனை செய்து வருவதாக கூறினார். இவ்வாறு செய்வதன் மூலம் பின் லேடன் பற்றிய சந்தேகங்கள், ஊகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம் என்று ஜான் பிரினினன் மேலும் கூறினார்.

0 comments: