Tuesday 3 May 2011

இஸ்லாமிய முறைப்படி சடலத்தைக் கடலில் அடக்கம் செய்ய கூடாது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
லண்டன்: அமெரிக்கப் படையின் இரகசிய தாக்குதலில் பலியான ஒசாமா பின் லேடனின் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடம்பற்றி பரவலாகக் கேள்விகள் எழுந்து வருகின்றன. முன்னதாக பின் லேடனின் உடலை அமெரிக்கத் துருப்புகள் கைப்பற்றியுள்ளது என்று அதிபர் ஒபாமாவும் அறிவித்திருந்தார்.
இதனிடையே ஒசாமா பின் லேடனின் உடல் பூமியில் அடக்கம் செய்தால், அது ஒரு புனிதத் தலமாக மாறிவிடும் என்பதால் அவரது உடல் கடலுக்குள் அடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அவர் இறந்த 24 மணி நேரத்திற்குள் அடக்கம் செய்யப்படவேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அமெரிக்க அதிகாரிகளின் இக்கூற்றுக்கு இஸ்லாமியர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அல்-கெய்டா தீவிரவாத கும்பலின் தலைவரான ஒசாமா பின் லேடனின் சடலம் வடக்கு அரேபிய கடலில் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது என்று ரியுட்டர்ஸ் செய்தி நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.
மலேசிய நேரப்படி நேற்று அதிகாலை ஒசாமா பின் லேடன் கிழக்கு பாகிஸ்தானில்  அமெரிக்கப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.ஒசாமாவின் உடல் கடலில் வீசப்பட்டிருப்பது உண்மையானால், இஸ்லாம் அதனைக் கடுமையாக எதிர்க்கும் என்று அல்-அசார் என்ற இஸ்லாமிய மதகுருவும் ஷேக் அகமது அல் தாயிப்பும் தெரிவித்தனர்.
மனிதராகப் பிறந்த அனைவரும், அவர் மதம் சார்பற்றவராக இருந்தாலும், இஸ்லாமியராகவோ  அல்லது கிறிஸ்துவராக யாராக இருந்தாலும் அவரது சடலத்திற்கு உரிய மரியாதைக் கொடுக்க வேண்டியது அவசியமாகும். இஸ்லாமிய முறைப்படி சடலம் நிலத்தில்தான் புதைக்கப்பட வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் நீரில் மூழ்கியிருந்தால் மட்டுமே அதனை மத அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியும் என்று அவர்கள் கூறினர்.

0 comments: