Monday, 4 April 2011

துபாய் வேலைக்கு ஆள் தட்டுப்பாடு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்தியாவில் தற்போது சம்பள உயர்வு ஏற்பட்டுள்ளதால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில்
வேலையாட்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு 12.9 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதனால் இந்திய தொழிலாளர்களை ஈர்க்கும் வகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சம்பளத்தை உயர்த்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சொந்த நாடுகளில் அதிகமான சம்பளம் கிடைப்பதால் தொழிலாளர்கள் அரபு நாடுகளுக்கு வேலைத் தேடி செல்வது குறைந்து விட்டது. இதனால் அங்கு வேலையாட்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

0 comments: