Monday 4 April 2011

தமிழகத் தேர்தல் களைக்கட்டுகிறது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
  தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க கூட்டணி கட்சி
வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி நாளை சென்னை வருகிறார். அவர் கலைஞர் மு.கருணாநிதியுடன் ஒரே மேடையில் பேசுவார். மாவட்ட ரீதியில் இரண்டு கட்ட பிரச்சாரத்தை முடித்துக் கொண்ட கலைஞர் இன்று சென்னையில் பிரச்சாரம் செய்வார். இதனையடுத்து வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி நடைப்பெறவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. பிரச்சாரம் முடிவதற்கு இன்னும் 7 நாட்களே உள்ளதால் 234 தொகுதிகளிலும் கட்சித் தலைவர்கள், முன்னணி நிர்வாகிகள், மத்திய, மாநில அமைச்சர்கள் சூறாவளி பயணம் மேற்கொண்டு வேட்பாளர்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இதனிடையே, முதல்வர் கருணாநிதி கடந்த 23-ஆம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். தொடர்ந்து திருவாரூர், தஞ்சை, திருச்சியில் முதல்கட்டப் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு இரண்டாவது கட்ட பிரச்சாரத்தை கடந்த மார்ச் 30-ஆம் தேதி கோவையில் தொடங்கினார். தொடர்ந்து கோவை, ஈரோடு, சேலம், வேலூர் ஆகிய இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் கூட்டணி வேட்பாளர்களுக்கு கலைஞர் ஆதரவு திரட்டினார். முதல்வர் பங்கேற்ற கூட்டங்களில் வெள்ளமென மக்கள் திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: