Wednesday 20 April 2011

எந்த ஆட்சி அமைந்தாலும் பத்து சீட்டுகள் தான் வித்தியாசம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழகத்தில் எந்த ஆட்சி அமைந்தாலும் 10 சீட்டுகள்தான் வித்தியாசம் இருக்கும். அதே நேரத்தில் ஜெயலலிதா தமிழக முதல்வராக ஆக முடியாது என்று
அகில இந்திய ஜனதா  கட்சித் தலைவர் சுப்ரமணியசுவாமி குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி மீது வழக்குத் தொடர பிரதமர் மன்மோகன்
சிங்கிடம் அனுமதி கேட்டு கடந்த 15-ஆம் தேதி கடிதம் ஒன்றை பிரதமர் அலுவலகத்தில் கொடுத்துள்ளேன். சோனியாகாந்தி கேபினெட் அந்தஸ்த்தில் இருப்பதால்
அவர் மீது வழக்குத் தொடர பிரதமரின் அனுமதி தேவை. எனினும் மூன்று மாதத்திற்குள் அனுமதி வழங்காவிட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்  தம
஢ழகத்தில் நடந்தேறிய சட்டசபை தேர்தலில் எந்த கட்சி அமைந்தாலும் 10 சீட்டுகள் தான் வித்தியாசத்தில் தான் ஆட்சி அமைக்க முடியும். எனினும் ஜெயலலிதா
முதல்வராக முடியாது.அ.தி.மு.க-வில் போட்டியிட சீட் பெற்றவர்கள் சசிகலாவுக்குப் பணம் கொடுத்துதான் பெற்றிருக்கிறார்கள். லோக்பால் வரைவு மசோதா
சம்பந்தமாக அன்னாஹசாரே எடுத்துக்கொண்டது நல்ல முயற்சிதான். அவரை வைத்து சில தொண்டு நிறுவனங்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கின்றன என்று
சுப்ரமணியசுவாமி தமது அறிக்கையில் கூறினார்.

0 comments: