Wednesday 20 April 2011

ரிஷிவந்தியம் யாருக்கு?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ரிஷிவந்தியத்தில் அதிகமான பெண்கள் வாக்களித்துள்ளனர். தற்போது பெண்களின் வாக்கு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது. இத்தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் அதன் வேட்பாளர் சிவராஜ்க்கு பெண்களின் வாக்கு என உருமிக் கொண்டிருக்கிறது. அதேவேளையில் பெண்களின் அமோக ஆதரவு விஜயகாந்திற்குதான் என தேமுதிக வட்டாரம் ஆணி அறைந்தாற் போல் கூறி வருகிறது.  ரிஷிவந்தியத்தில் இரண்டு வேட்பாளர்களியேயும் போட்டி பரப்பரப்பாக உள்ளது. யார் வெற்றி பெறுவார்கள் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இத்தொகுதியில் 2 லட்சத்து 6,729 வாக்குகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 67 வாக்குகள் பதிவாகி  உள்ளன. மொத்த வாக்குகள் 82.75  விழுக்காடு. இதில் பெண்களின் வாக்குகள் மட்டும் 93 விழுக்காட்டை  அடைந்துள்ளது.  இதனால் காங்கிரஸ் கட்சி மிகவும் உற்சாகத்தோடு இருக்கிறது. அரசின் பெரும்பாலான திட்டங்கள் பெண்களுக்கு சாதகமாக உள்ளதால் வாக்கு காங்கிரசுக்குதான் என திண்ணமாக உள்ளானர். இதே மாதிரி தேமுதிகாவும் பலவகையில் பெண்களை கவர்ந்துள்ளது. ஆகையால் வெற்றி யாருக்கு என்பதில் அனைவருமே ஆர்வமாக உள்ளனர்.

0 comments: