Wednesday 20 April 2011

அமெரிக்காவில் சூறாவளி, சீனாவில் ஆலங்கட்டி மழை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அமெரிக்காவின் சில பகுதிகளை கடும் சூறாவளிக் காற்று தாக்கி வருகிறது. இந்த சூறாவளியில் சிக்கி குறைந்தது 45 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் தென் பகுதியில் உள்ள வட  கரோலினா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்வதுடன் பயங்கர புயல் காற்றும் வீசுகிறது.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் 240 சூறாவளி சில பகுதிகளைத் தாக்கியுள்ளது. அதில் வட கரோலினா மாநிலத்தில் மட்டும்  62 புயல் காற்று தாக்கியதாகக் கூறப்படுகிறது.
சூறாவளியில் சிக்கி இங்கு 21 பேர்  உயிரிழந்ததாகவும் தகவல் கள் கூறுகின்றன.  இப்பகுதியில்  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால்  இங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.
ஒக்கலஹோமா,  வெர்ஜினியா அர்கான்சாஸ், மிசிசிப்பி, டெக்சாஸ் அலபாமா, ஜார்ஜியா  ஆகிய மாநிலங்களிலும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்ததுடன் பலத்த சூறாவளிக் காற்றும் வீசுகிறது.
புயல் காற்றில் சிக்கி காணாமற்போனவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ள வேளையில் வட கரோலினாவில்  இந்தப் பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சூறாவளிக் காற்று வீசியபோது  வீட்டின் மேற்கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலைகளில் சென்றுகொண்டிருந்த வாகனங் கள் சூறாவளிக் காற்றினால் தூக்கி வீசப்பட்டன. கன மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக பல இடங்களில் மின்சார விநியோகம் தடைப்பட்டது. சேதமடைந்த பகுதி களில் போர்க்கால நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. அமெரிக்க மக்கள்  ஆண்டுதோறும் இதுபோன்ற கடும் சூறாவளியால் பாதிக்கப்படுகின் றனர். அமெரிக்காவின் சில பகுதிகள் கடும் சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள _வைளயில் சீனாவில் ஆலங்கட்டி மழை பெய்வதுடன் பலத்த புயல் காற்றும் வீசுவதாக அந்நாட்டு தகவல் சாதனங்கள் தெரிவித்துள்ளன.
இந்தப் பேரிடரில் சிக்கி குறைந்தது 12 பேர் உயிரிழந்த தாகவும் ஐம்பதுக்கும் அதிக மானோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
சீனாவின் தென் பகுதியில் அமைந்துள்ள குவாங்டோங் மாநிலம் அதிகமாகப் பாதிக்கப் பட்டுள்ளது. குவாங்சோவ், ஃபோஷான் உள்ளிட்ட பல நகரங்களிலும் ஆலங்கட்டி மழை தொடர்ந்து பெய்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
பலத்த காற்றில் வீடுகள் மற்றும் கட்டடங்களின் சுவர்கள் இடிந்து விழுந்ததால் இடிபாடுகளுக் கிடையில் சிக்கி பலர் உயிரிழந் தனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிவாரண உதவி வழங்க ஒரு குழுவினர் அங்கு அனுப்பப் பட்டுள்ளதாக குவாங்டோங் மாநில அரசாங்கம் கூறியது.
காயமடைந்தவர்களை உடன டியாக அருகில் உள்ள மருத்துவ மனைகளில் சேர்த்தல், முதி யோருக்கு உதவுதல்,   உள்ளிட்ட பணிகளை அரசாங்கம் தீவிரப் படுத்தியுள்ளது.

0 comments: