Wednesday, 6 April 2011

காங்கிரஸ்ஸுடன் கூட்டனி ஆட்சி கலைஞர் சூசகமாக அறிவிப்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போதுமான இடங்களில் வெற்றிபெறாவிட்டால்,
 காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து செயல்படுவோம் என்று, கூட்டணி ஆட்சி குறித்து முதல்வர் கருணாநிதி சூசகமாகப் பேசியுள்ளார்.

திங்கட்கிழமை வடசென்னை மாவட்டத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை, அறிமுகப்படுத்தும் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி இவ்வாறு தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியின் கடந்தகால சாதனைகள் தொடர வேண்டும் என்றால் மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள கட்சிகளுக்கிடையே வலுவான நல்ல உறவு இருக்க வேண்டும் என்று கருணாநிதி குறிப்பிட்டார்.இதன் அடையாளமாகத்தான் திமுக - காங்கிரஸ் கூட்டணி திகழ்கிறது.

இது ஏதோ தேர்தலுக்காக தாம் சொல்லவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தின் தேவைகள் அனைத்தையும் மாநிலக் கட்சிகளால் மட்டுமே உருவாக்கிக் கொடுத்துவிட முடியாது. மத்திய அரசோடு இணைந்திருக்கிறபோதுதான் நம்முடைய உரிமைகளை வலியுறுத்தி பெற முடியும்.எனவே உரிமைகளைக் கேட்டுப்பெற இந்தக் கூட்டணி மேலும் மேலும் வலுவாகத் தொடர வேண்டும் கருணாநிதி கூறுகிறார்.

0 comments: