இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
85 வயதாகும் சாய்பாபாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த மாதம் 28-ந்தேதி புட்டபர்த்தி
சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசம் அடைந்து வந்தது.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசம் அடைந்து வந்தது.
சாய்பாபாவின் கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் செயல் இழந்தன. செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இதய துடிப்பும் நாளுக்கு நாள் குறைந்து வந்தது. பேஸ்மேக்கர் கருவி வேலை செய்யவில்லை. 36 டாக்டர்கள் அடங்கிய குழுவினர் 24 மணி நேரமும் “வென்டிலேட்டரில் வைத்து கண்காணித்து வந்தனர்.
கடந்த 28 நாட்களாக உயிருக்கு போராடிய சாய்பாபா இன்று காலை 7.40 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது மரண செய்தியை சாய் டிரஸ்ட் நிர்வாகிகள் ஆந்திர அரசுக்கு தெரியப்படுத்தினார்கள்.
இதையடுத்து ஆந்திர அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சாய்பாபா உயிர் பிரிந்து விட்டது, அவர் நம்மிடையே இல்லை. பக்தர்களும், தொண்டர்களும் அமைதி காக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
சாய்பாபா உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை முதலே ஏராளமான தலைவர்கள், பிரமுகர்கள், பக்தர்கள் புட்டபர்த்தி நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர்.
ஏற்கனவே கடந்த சில நாட்களாக சாய்பாபா பக்தர்கள் புட்டபர்த்தி சென்று குவிந்துள்ளனர். சாய்பாபா உடலை தரிசனம் செய்வதற்காக அவர் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்தை நோக்கி சென்றனர். இதனால் அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டு நெரிசலை கட்டுப்படுத்தி வருகிறார்கள்.
ஆந்திரா முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment