Tuesday 26 April 2011

இந்தியா: பருப்பு ஏற்றுமதிக்கு மேலும் ஒராண்டு தடை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
உள்நாட்டு தேவைக்குப் போதுமான அளவு பருப்பு இல்லாததால் அயல் நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதை இந்திய மத்திய அரசாங்கம் மேலும் ஓராண்டுக்குக்குத் தடையை நீட்டித்துள்ளது. இந்தியாவில் தேவைக்கு ஏற்ப பருப்பு உற்பத்தி உயராததால் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் பருப்பு வகைகளை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.இந்த பருப்பு இறக்குமதியானது  நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறதே தவிர குறையவில்லை. எனினும் தற்போது நாட்டின் பருப்பு வகைகள் 1.6 டன்களை எட்டியிருந்தாலும், நாட்டின் தேவை 1.9 கோடி டன்களாக எட்டியுள்ளதால், இவ்வாண்டும் 34 லட்சம் டன் பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் பருப்பு ஏற்றுமதி மீதான தடை அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்படும் என்று அயல் நாட்டு வாணிபத்துறையின் தலைமை இயக்குனர் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments: