Sunday 24 April 2011

இந்தியாவுக்கு மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 71வது இடம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மக்கள் தொகையில் 2வது இடத்தில் இருக்கும் இந்தியா, மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 71வது இடத்தை பிடித்துள்ளது.

எந்த நாட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சியானவர்களாக இருக்கிறார்கள் என உலகம் முழுவதும் 124 நாடுகளில் கேலப் என்ற நிறுவனம் ஒரு ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் டென்மார்க் நாட்டு மக்கள் தான் உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான மக்கள் என தெரியவந்துள்ளது. அந்நாட்டு மக்கள் 72 சதவீதம் பேர் தாங்கள் மிகவும் திருப்தியாக, மகிழ்ச்சிகரமாக இருப்பதாக கூறியுள்ளனர்.

மக்கள் தொகையில் 2வது இடத்தில் இருக்கும் இந்தியாவுக்கு , மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 71வது இடம் தான் கிடைத்துள்ளது. இந்தியாவில் 17 சதவீதம் மக்கள் மட்டுமே தாங்கள் மனநிறைவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். 64 சதவீத மக்கள் தாங்கள் வாழ்க்கையை பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். 19 சதவீதம் பேர் வாழ்க்கை மிகவும் வேதனைக்குரியதாக இருப்பதாக கருத்துக்கணிப்பின் போது அங்கலாய்ப்பை வெளிபடுத்தியிருக்கின்றனர். அண்டை நாடுகளான வங்கதேசம், சீனா முறையே 89, 92வது இடங்களிலும் இருக்கின்றன.

இந்த பட்டியலில் பாகிஸ்தான் 40வது இடத்தில் இருக்கிறது

0 comments: