Tuesday 26 April 2011

கவச்சியாகவும் நடிப்பேன் கார்த்திகா

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நாயகிகளுள் முக்கியமானவர் ராதா. அவருடைய மூத்த மகளான கார்த்திகாவை கோ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் செய்திருக்கிறார். தனது மகள் நடித்த படம் . அதற்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்து தனது மகளை நீங்கதான் ப்ளஸ் பண்ணனும் என்று கேட்டுகொண்ட ராதா, "நான் நடிக்க வரும்போது சினிமாவை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இயக்குநர் சொன்னதைதான் நான் செய்தேன். அதேபோலதான் என்னுடைய மகளும் சினிமாவுக்காக எதையும் கற்றுகொள்ளவில்லை. என்றாலும், மற்றதுறைகளில் பெண்கள் வேலைபார்ப்பதுபோலதான் இந்த துறையும். அதற்காக அவர்கள் அதைபற்றி என்ன என்ன தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை தெரிந்துவைத்திருக்கிறாள். எனக்கு எப்படி பாரதிராஜா சார் குருவாக இருந்தாரோ அதேபோல எனது மகளுக்கு கே.வி. ஆனந்த் குரு. அவளின் வயதை காட்டிலும் ஒரு ஃபவர்புல்லான கேரக்டரை கொடுத்து முதல் படத்திலேயே அவளுடைய திறமையை வெளிகாட்டியிருக்கிறார்." என்று கூற,

அவரைத்தொடர்ந்து பேசிய கார்த்திகாவிடம், அம்மா சில படங்களில் கவர்ச்சியாக நடிச்சிருக்காங்க. நீங்க அதுபோல நடிப்பிங்கலா? என்று கேள்வி கேட்க, கதைக்கு அவசியம் என்றால் நடிப்பேன். என்று  கார்த்திகா பதிலளிக்க அவரிடம் இருந்து மைக்கை கைபற்றிய ராதா, என் பொண்ணு என்பதால் அல்ல, மற்ற நடிகைகள் யாராக இருந்தாலும், கவர்ச்சி என்பதற்கு ஒரு எல்லை இருக்கிறது அந்த எல்லைக்குல் உட்பட்டால் கவர்ச்சியாக நடிக்கலாம். என்னுடைய முதல் படத்திலே நான் ஸ்விம்மிங் ட்ரெஸ் போட்டேன். அது கதைக்கு தேவைப்பட்டது. குளிக்கும்போது புடவை கட்டிகொள்ள முடியுமா? அதுபோன்ற இடங்களில் அப்படித்தான் நடிக்க வேண்டும். ஆனால் அதற்கும் ஒரு லிமிட் இருக்கு, அந்த லிமிட் கார்த்திகாவுக்கும் இருக்கு, அதற்கு உட்பட்ட கவர்ச்சியான காட்சிகளில் அவர் நடிப்பார். என்றார்.

மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிப்படங்களில் எது உங்களுக்கு பிடிக்கும்? என்ற கேள்விக்கு, அடிப்படையில் நான் மலையாளி, ஆனால் தெலுங்கில்தான் ஒரு நடிகையாக அறிமுகமானேன். அந்த மொழி புதுசா இருந்ததால நான் கொஞ்சம் தடுமாறினேன். அதுபோல நான் நடித்த மலையாளப்படத்தில் சமஸ்கிருத மலையாளம் பேச வச்சதால அங்கேயும் கொஞ்சம் கஷ்ட்டப்பட்டேன். தமிழ பொறுத்தவரையில் எந்த கஷ்ட்டமும் இல்லாமல் இயல்பாக பேசி நடித்திருக்கிறேன். அதனால எனக்கு சவுக்கரியமா இருக்கிற மொழி தமிழ் தான். என்றார் கார்த்திகா.

0 comments: