Tuesday, 19 April 2011

49 கோடி பணத்தை யாரும் கேட்கவரவில்லை: பிரவீ‌ண்குமார்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தே‌‌ர்த‌ல் நே‌ர‌த்த‌ி‌‌‌ல் நட‌ந்த சோதனை‌யி‌‌ல் கை‌ப்ப‌ற்ற‌‌ப்ப‌ட்ட 49 கோடி பண‌த்தை யாரு‌ம் ‌திரு‌ப்‌பி வா‌ங்க வர‌வி‌ல்லை எ‌ன்று த‌மிழக தலைமை அ‌திகா‌ரி ‌‌‌‌பிர‌வீ‌ண்குமா‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு சரியான ஆவணங்களை காட்டி ரூ. 5 கோடியை மட்டும் தேர்தலுக்கு முன்பு சிலர் திரும்ப பெற்றுள்ளனர் எ‌ன்றா‌ர்.

அதன் பிறகு இதுவரை யாரும் மீதம் உள்ள 49 கோடி ரூபா‌ய் பணத்தை திருப்பி வாங்க வரவில்லை எ‌ன்றா‌ர் ‌பிர‌‌‌வீ‌ண்குமா‌ர்.

இவை கணக்கில் காட்டப்படாத கறுப்பு பணமாக இருக்கலாம் எ‌ன்று‌ம் வருமான வரி செலுத்தியதற்கான ஆவணம், ஆதராம் இருப்பவர்கள் பணத்தை திரும்ப பெ‌ற்று‌க் கொ‌ள்ளலா‌ம் எ‌ன்று‌ம் ‌பிர‌வீ‌ண்குமா‌ர் கூ‌றினா‌ர்.

தமிழ்நாடு முழுவதும் நடந்த சோதனையில் மொத்தம் 54 கோடியே 17 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது ‌நினை‌வி‌ல் கொ‌ள்ள‌த்த‌க்கது.

0 comments: