Saturday, 2 April 2011

இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் இந்தியா, இலங்கை
அணிகளுக்கிடையே மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்தது. இரு அணிகளுமே முன்னாள் உலக சாம்பியன்கள் என்பதால் ஆட்டத்தின் முடிவு குறித்து அறிய அனைவரும் ஆவலாக இருந்தனர். இந்நிலையில், டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சங்ககரா முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். அந்த அணி நிர்‌ணயிக்கப்பட்ட 50 ஓவரில், 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில், ஜெயவர்த்தனே சிறப்பாக விளையாடி 103 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தில்சான் 33, குலசேகரா 32 ரன்கள் எடுத்தனர். இந்திய தரப்பில் ஜாகீர் கான் மற்றும் யுவராஜ் சிங் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஹர்பஜன் 1 விக்கெட்டையும் எடுத்தனர்.

275 ரன்கள் எடுத்தால் உலக சாம்பியன் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. இந்திய அதிரடி வீரர் சேவக் 2 பந்துகளை சந்தித்த நிலையில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். சொந்த மண்ணில் களமிறங்கிய சச்சின் 18 ரன்களுடன் நடையை கட்டினார். இந்நிலையில், அணியை சரிவிலிருந்து மீட்கும் பொறுப்பை காம்பீரும், விராட் கோலியும் தங்கள் தோளில் சுமந்தனர். விராட் கோலி 35 ரன்கள் எடுத்து இந்திய வெற்றிக்கு தன்னால் முடிந்த பங்கை செலுத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய காம்பீர் 97 ரன்களுக்கு அவுட்டாகி, சதத்தை தவறவிட்டார். பின்னர் தோனி, யுவராஜ் சிங் ஜோடி வெற்றிக்கு தேவையான ரன்கள் எடுத்தது. இதையடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் ‌இந்தியா அபார வெற்றி பெற்று உலக கோப்பையை கைப்பற்றியது.

0 comments: