இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியைக் காண்பதற்காக, இலங்கை அதிபர் ராஜபக்ஷே வரும் சனிக்கிழமை மும்பை வருகிறார்.
இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் வருகையையொட்டி, மும்பையில் பலத்த பாதுகாப்பு போடப்படவுள்ளது.
மும்பையில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள உலகக் கொப்பை போட்டியில் இந்திய - இலங்கை அணிகள் மோதுகின்றன.
இதில் இலங்கை அணியை உற்சாகப்படுத்தும் விதமாக, அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே போட்டியைக் காண வருகிறார்.
இந்தத் தகவலை வெளியிட்ட ராஜபக்ஷேவின் செய்தித் தொடர்பாளர் பந்துலா ஜெயசேகர, "சர்வதேச கிரிக்கெட்டியில் இருந்து ஓய்வு பெறும் முத்தையா முரளிதரனுக்கு சமர்ப்பிக்கும் வகையில், இந்த உலகக் கோப்பையை இலங்கை வெல்ல வேண்டும் என அதிபர் விரும்புகிறார்," என தெரிவித்தார்.இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் வருகையையொட்டி, மும்பையில் பலத்த பாதுகாப்பு போடப்படவுள்ளது.
0 comments:
Post a Comment