இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னை: தி.மு.க -வுக்கும் காங்கிரசுக்கும் இடையே தொகுதி பங்கீடு குறித்த
சர்ச்சை எழுந்து, ஒருவழியாக ஓய்ந்து விட்ட நிலையில், தற்போது தி.மு.க-வோடு கூட்டணி சேறும் கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை முடிவு செய்யும் அடுத்தக்கட்டப் போராட்டம் எழுந்துள்ளது. சில குறிப்பிட்டத் தொகுதிகளில் காங்கிரசும் போட்டியிட விருப்பம் கொண்டுள்ளதால் இருகட்சிகளுக்குமிடையே நெருக்கடி உருவாகியுள்ளது.தொகுதி பங்கீட்டில் நிகழ்ந்ததைப் போன்று, தொகுதிகளை ஒதுக்குவதிலும் காலத்தாமதம் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதால் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளை பரிசீலிப்பதில் தி.மு.க அதிக மும்முரமாகச் செயல்படுகிறது. சென்ற முறை சட்ட சபை தேர்தலில் வெற்றியடைந்த தொகுதிகளையே காங்கிரசுக்கு ஒதுக்கிவிட்டு, கூடுதல் தொகுதிகளுக்கு தி.மு.க முக்கியத்துவம் அளிக்க உள்ளது.
தேர்தல் கமிஷன் செய்த சீரமைப்பினால், சில தொகுதிகள் நீக்கப்பட்டும் மேலும் சில புதிய தொகுதிகள் உருவாகியுள்ளன. இதனால் சில வி.ஐ.பி தொகுதிகளும் பாரம்பரியமிக்க தொகுதிகளும் பட்டியலில் விடுபட்டுள்ளன. ஆகவே இவற்றுக்கு வேறு தொகுதிகள் வழங்குவதிலும் தி.மு.க-வினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.இன்னும் சில தினங்களில் வேட்புமனு தாக்கல் நடைப்பெற இருக்கின்ற நிலையில், தி.மு.க கூட்டணியில் கட்சி வாரியாக போட்டியிடவிருக்கின்ற தொகுதிகளின் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 234 தொகுதிகலில் தி.மு.க 121 தொகுதிகளிலும், காங்கிரஸ்-63, பாம.க-30, வி.சி-10, கொ.மு.க -7, முஸ்லிம் லீக்-2, மற்றும் மூ.மு.க-1 தொகுதிகளிலும் போட்டியிடவிருக்கின்றன.

0 comments:
Post a Comment