Sunday, 13 March 2011

சிவிசி பதவி நீக்க விவகாரம்: உச்ச நீதிமன்ற அதிகாரம் தாமஸ் கேள்வி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக (சிவிசி) செயல்படுவதற்கு
தமக்குள்ள தகுதி பற்றி கேள்வி எழுப்புவதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை எனக்கூறி மறுஆய்வு மனுத்தாக்கல் செய்ய பி.ஜே.தாமஸ் முடிவு செய்திருக்கிறார். அவரது வழக்கறிஞர் வில்ஸ் மேத்யூஸ் இந்தத் தகவலை சனிக்கிழமை தெரிவித்தார். அரசியல் சட்ட பிரச்னைகள் இருப்பதால் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் மட்டுமே இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் தாமஸ் தனது மனுவில் கோரியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
சிவிசியாக பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டது செல்லாது என்று கடந்த 3-ம் திகதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சிவிசியை தேர்ந்தெடுத்த பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் அடங்கிய உயர்நிலைக்குழு, உரிய ஆவணங்களைப் பரிசீலிக்கவில்லை எனவும் உச்ச நீதிமன்றம் கூறியது.
வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு 30 நாள்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்ட வேண்டும். அந்த வகையில், அரசே உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்யாவிட்டால், ஏப்ரல் 2-ம் திகதிக்குள் தாமஸ் தரப்பில் மனுதாக்கல் செய்யப்படும் என மேத்யூஸ் கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவரின் அனுமதிக்குப் பிறகே சிவிசியை பதவிநீக்கம் செய்வது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். ஆனால், இந்த வழக்கில் அதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. இதனால் உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பு மீறப்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது.
தமக்கு இல்லாத அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் பயன்படுத்தியிருக்கிறது. இந்த வழக்கை மேலும் ஆய்வு செய்ய வேண்டும். எந்த வகையிலும் குடியரசுத் தலைவர் பதவி ரப்பர் ஸ்டாம்ப் போல கருதப்படக்கூடாது என்ற எண்ணம் கொண்டவன் நான்.
அரசியல் சட்டப்படி சிவிசியின் பதவி நீக்கத்துக்கு குடியரசுத் தலைவரின் அனுமதி தேவை. உச்ச நீதிமன்றம் இந்த அடிப்படைச் சட்ட அமைப்புக்கு எதிராகச் செயல்பட முடியாது. அரசியல் சட்டம்தான் முதன்மையானது.
அரசியல் சட்டப் பிரிவு 146(3)ன்படி அரசியல் சட்டம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அடங்கிய வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட் பெஞ்ச் மட்டுமே விசாரிக்க முடியும்.
பாமாயில் வழக்குக்காகத்தான் நீதிமன்றம் இதுபோன்ற தீர்ப்பை வழங்கியிருக்கிறது என்றால், வெறும் முதல் தகவல் அறிக்கை மூலமே எந்தவொரு நேர்மையான அதிகாரியையும் உயர் பதவிக்கு வரமுடியாமல் செய்துவிட முடியும்.
இதை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை அந்த வகையில் இந்த வழக்கு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று தாமஸ் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

0 comments: