Sunday, 27 March 2011

இலாபம் சம்பாதிக்கும் பீஸா நிறுவனங்கள் ஓர் அதிர்ச்சி தகவல்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
வீடுகளுக்கு பிஸா உணவு வகைகளை விநியோகிக்கும் நிறுவனங்கள் 90 சதவீதம் இலாபமீட்டுவதாக அந்த துறைசார் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.வெளியில் சென்று உணவுகளை உண்ணுவது செலவு கூடியது எனக் கருதி செலவுகளை மிச்சப்படுத்த பலர் வீடுகளில் இருந்தவாறே உண்ண நினைக்கும் ஒரு பின்னணியில் தான் இந்த நிறுவனங்கள் இவ்வாறான இலாபத்தையும் ஈட்டி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
12.49 பவுண் செலுத்தி உண்ணும் ஒரு பிஸாவுக்கான உற்பத்திச் செலவு 1.25 பவுண் மட்டுமே என்று அவர்கள் உற்பத்திச் செலவை விவரமாக எடுத்துக்காட்டியுள்ளனர்.
இது தவிர நிறுவனங்களுக்கு இன்னும் சில செலவுகளும் உள்ளன. வாடகை, வரி, சம்பளம் என செலவுகள் உள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டாலும் இந்த இலாபவீதம் மிகவும் அதிகமானது.
வீடுகளுக்கு பிஸா உணவுகளை விநியோகிக்கும் பிரிட்டனின் மிகப் பெரிய நிறுவனமான டொமினோஸ் பிஸாவிலிருந்து தான் இந்த செலவு விவரங்கள் கசிந்துள்ளன.
இந்த நிறுவனத்தின் 2010க்கான இலாபம் 38 மில்லியன் பவுண்களாகும். இது அதற்கு முன்னைய ஆண்டைவிட 27.3% அதிகமாகும்.

0 comments: