Tuesday, 29 March 2011

தி.மு.க விற்க்கே ஒட்டு ம.தி.மு.க ரகசிய உத்தரவு?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

மதிமுகவினருக்கு ரகசிய வாய்மொழி உத்தரவு ஒன்று சென்னையிலிருந்து கட்சியின்
மாவட்ட நிர்வாகிகள மூலமாக பாஸ் ஆகியுள்ளதாம்.வருகிற தேர்தலில் உங்களது வாக்குகளை வீணடிக்க வேண்டாம். அனைவரும் திமுகவுக்கு உங்களது வாக்குகளை செலுத்துங்கள். மறந்தும் கூட அதிமுகவுக்கு வாக்களித்து விடக் கூடாது. அதில் மிகவும் கவனமாக இருங்கள். அதேபோல காங்கிரஸுக்கும் நமது ஒரு வாக்கு கூட போகக் கூடாது. நமது வாக்குகளை தேடித் தேடி போய் வீணடிக்க வேண்டாம் என்று கூறி, திமுகவுக்கு அதை செலுத்துவதை உறுதி செய்யுங்கள் என்று அந்த உத்தரவு கூறுகிறதாம்.
இதனால் உற்சாகமடைந்துள்ள மதிமுகவினர், தங்களது தாய்க் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க ஆயத்தமாகி வருவதாக தெரிகிறது. சில இடங்களில் மறைமுகமாக திமுகவுக்கு ஆதரவாக மதிமுகவினரும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது மறைமுகமாக திமுக வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்கின்றனராம்.

fax:
your@email.com
http://www.yoursite.com

0 comments: