Sunday, 27 March 2011

விஜயகாந்த் தொகுதிகளை புறக்கணிக்கிறார் ஜெ?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தேமுதிகாவோடு கூட்டணி என அதிமுக ஊர் அறிய கூப்பாடு போட்டாலும் செயல்பாட்டில் என்னவோ விஜயகாந்தை ஓரங்கட்டவே
பார்க்கிறார் ஜெயலலிதா. இதற்கு முன்னர் விஜயகாந்த் தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்கு ஒப்புக் கொண்டவர் இப்போது திட்டத்தை மாற்றிக் கொண்டதோடு அவரின் காற்று சரத்குமார் போட்டியிடும் தொகுதிகளில் வீசத் தொடங்கி விட்டிருக்கிறது.
சரத்குமாருக்காக ஜெயலலிதா பிரச்சாரத்தில் குதித்திருக்கிறார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத் திட்டதில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. 30ஆம் தேதி உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, செய்யார் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்கிறார். விழுப்புரம் செல்லும் ஜெயலலிதா முதலில் தேமுதிக போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவதாக இருந்தது. ஆனால் தற்போது அவர் விஜயகாந்த் தொகுதிக்கு செல்லாமல் அருகில் உள்ள தொகுதியில் மட்டும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
 பெரும் இழுபறிக்கு பின்னர் அதிமுக- தேமுதிக தொகுதி உடபாடு முடிந்ததாலும், அதிமுக போட்டியிட விரும்பிய தொகுதிகளை தேமுதிக வலியுறுத்தி பெற்றதாலும் இப்போது ஜெயலலிதா அந்தத் தொகுதிகளை புறக்கணிப்பதாக கூறப்படுகிறது. இது தேமுதிக தொண்டர்களிடையே பெரும்அதிருப்தி அலையை ஏற்படுத்தியுள்ளது.

0 comments: