இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
இன்று டெல்லியில் சோனியாகாந்தி வீட்டில் பிற்பகல் பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் தி-.மு.க. சார்பாக மு.க. அழகிரி மற்றும் தயாநிதிமாறனும் காங்கிரஸ் சார்பாக பிரணாப் முகர்ஜி, அகமது பட்டேல் மற்றும் குலாம் நபி ஆசாத் கலந்து கொண்டனர். இப்பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதாகவும், காங்கிரசுக்கு 63 தொகுதிகள் ஒதுக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் ஆலோசனைக்குப்பிறகு டெல்லியில் குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காங்கிரசுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகுதிகளை விட மூன்று தொகுதிகள் தி.மு.க. அதிகமாக ஒதுக்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. (1), முஸ்லீம் லீக் (1) தொகுதிகளை விட்டுத்தர விருப்பம் தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் இரண்டு நாட்களாக நடந்த தொகுதி பிரச்சினை முடிவு பெற்றது
0 comments:
Post a Comment