இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
இன்று (செவ்வாய்) காலை டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைமை தேர்தல் அதிகாரி குரேஷி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் 5 மாநில தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 5 மாநிலத்தில் எப்போது தேர்தலை நடத்துவது என்ற ஆய்வும் நடந்தது. ஏப்ரல்- மே மாதங்களில் எந்தெந்த நாட்கள் ஓட்டுப்பதிவுக்கு சாதகமாக இருக்கும் என்று ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி தேர்தல் ஆணையர் குரேஷி தேர்தல் தேதியை அறிவித்தார். ஏப்ரல் 13-ந்தேதி தமிழகத்திற்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என குரேஷி அறிவித்தார்.
மேலும் மே 13-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறவித்தார்.
0 comments:
Post a Comment